பயணிகளின் சோர்வு நிலையை அளவிட உதவும் புதிய 'ஹைடெக்' கழிப்பறை: ஜப்பானில் கண்டுபிடிப்பு!

புதிய 'ஹைடெக்' கழிப்பறை

ஜப்பானின் கனகவா ப்ரிஃபெக்சரின் எபினா சேவை பகுதியில் ஒரு தனித்துவமான கழிப்பறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பல நவீன தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளதைப் போல, நிறைய புதிய யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் சில நேரங்களில் தேவையற்றதாகத் தோன்றினாலும் பயன்படுத்துவதற்கு சுவாரஸ்யமாகவும் மற்றும் வேடிக்கையாகவும் இருக்கும். அந்த வகையில், ஜப்பானின் கனகவா ப்ரிஃபெக்சரின் எபினா சேவை பகுதியில் ஒரு தனித்துவமான கழிப்பறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்களின் சோர்வு அளவை அளவிட உதவுகிறது. இந்த இடம் டோக்கியோவில் இருந்து 45 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது.

வழக்கமாக அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் நெடுஞ்சாலை ஓய்வு நிறுத்தங்களில் சிறிதுநேரம் இடைவெளிகளை எடுக்க விரும்புவார்கள். இதற்காக பல்வேறு சேவை பகுதி நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுத்தங்கள் சோர்வாக இருக்கும் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் தங்களை மீண்டும் உற்சாகப்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும். அந்த வகையில், இந்த குறிப்பிட்ட சேவை இடத்திற்கும் வரும் மக்கள் உணவுகளை சாப்பிடலாம். சற்று ஓய்வெடுக்க விரும்புபவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். இன்னும் கூடுதலாக அங்குள்ள பொதுக்கழிப்பறைகளில் தங்களது சோர்வு அளவை சரிபார்த்துக் கொள்ளும் புதிய தொழில்நுட்பத்தையும் சேர்த்துள்ளது.

இந்த கழிப்பறையில் உள்ள அமைப்பு எவ்வாறு இயங்குகிறது? என்பது குறித்து உள்ளூர் செய்தி நிறுவனமான சோராநியூஸ் 24-ன் ஒரு அறிக்கை இந்த நடைமுறையை விளக்கியது. அதில் கழிப்பறை இருக்கைக்கான பட்டன்களை கொண்ட ஒரு தொடுதிரை சோர்வை அளவிடும் ஒரு அமைப்பை கொண்டுள்ளது. இதற்காக ஒரு பயனர் தாங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுத்து சில விவரங்களைத் உள்ளிட வேண்டும். இதையடுத்து அவர்கள் கழிப்பறைக்கு வந்த நோக்கத்தை முடிக்கலாம். கழிப்பறை இருக்கையில் அமரும் போது அதில் உள்ள சென்சார்கள் உங்கள் சோர்வின் அளவை அளவிடும்.

Also read... சிக்கனுக்கு ஆசைப்பட்ட நாய்க்கு ஏற்பட்ட விபரீதம்...!

அதுவும் இந்த சென்சார்கள் சோர்வு அளவை அளவிட ஒரு நிமிடம் எடுத்துக்கொள்கிறது. இந்த செயல்முறை குறிப்பாக சோர்வினை கணக்கிட துடிப்பின் ஏற்ற இறக்கங்களை சரிபார்க்கும் அதிர்வு சென்சார்களை பயன்படுத்துகிறது. இதற்கு ஒருவர் கணினியில் தங்கள் வயது வரம்பை தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து அவர்கள் சோர்வாக இருக்கிறார்களா இல்லையா என்று கணினியிடம் சொல்ல வேண்டும். இறுதியாக கணினியில் ஸ்டார்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.ஒருவர் சோர்வுற்ற நிலையில் இருக்கும் போது அவரின் அனுதாப நரம்பு மண்டலத்தில் பதற்றம் அதிகரிக்கிறது மற்றும் பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தின் செயல்பாடு குறைகிறது. ஒருவரின் சோர்வு நிலைகளை கண்டறிய கழிப்பறையில் இணைக்கப்பட்டுள்ள சென்சார்கள் துடிப்பு அளவீடுகள் மற்றும் அதன் ஏற்ற இறக்கங்களை பகுப்பாய்வு செய்யும். அவை முடிந்ததும், கணினி அந்த குறிப்பிட்ட பயனருக்கு அவரின் சோர்வு அளவைக் காண்பிக்கும். இந்த கணினியில் மொத்தம் 3 சோர்வு நிலைகள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அவை சோர்வாக இருப்பது, ஓரளவு சோர்வாக இருப்பது, சோர்வு இல்லை ஆகியவை ஆகும். சென்சார்களின் பகுப்பாய்வுக்கு பிறகு இந்த நிலையில் ஏதேனும் ஒரு நிலையை கணினி காட்சிப்படுத்தும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: