விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பர். வாழ்வில் சிகரம் தொடுவதற்கு ஏதேனும் ஒன்றை பற்றிக்கொண்டு விடாமல் முயற்சி செய்தால் போதும். என்றாவது ஓர் நாள் நாம் அடைய நினைக்கும் இடத்திற்கு சென்று அடையலாம். அதற்கு நம்மிடம் தேவை ஒன்றே ஒன்று விடா முயற்சி. இதனை உதாரணமாகக் கொண்டு இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தனது சைக்கிளின் பின் சிலிண்டரை வைத்துக் கொண்டு சைக்கிளை ஒரு கையை பிடித்துக் கொண்டு ஓட்டுகிறார். அவருக்கு ஒரு கால் மட்டுமே உள்ளது. மற்றொரு காலில் பெடலை மிதிப்பதற்கு பதிலாக ஒரு கம்பினை வைத்துக் கொண்டு பெடலை அழுத்தி சைக்கிளை ஓட்டுகின்றார். இந்த காணொளி ட்விட்டரில் வைரலாகி வருகின்றது. இளைஞரின் செயலை கண்டு பலரும் வாழ்த்துக்களையும், அவரது தன்னம்பிக்கை குறித்து மரியாதையையும் கமெண்ட்ஸ் மூலமாக பதிவிட்டு வருகின்றனர்.
“Never give up, for that is just the place and time that the tide will turn.”
This is @thebetterindia 🇮🇳
VC: @AwanishSharan
pic.twitter.com/dmDvwoIfEh
— Erik Solheim (@ErikSolheim) December 10, 2021
இந்த வீடியோவை இதுவரை 103.6 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 638 பேர் மறுபதிவு செய்துள்ளனர். 3,932 பேர் லைக் செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Viral Video