கடந்த ஒன்றரை ஆண்டுகளில், ‘கொரோனா வைரஸ்’ என்ற சொல் உலகெங்கிலும் உள்ள சொற்களஞ்சியங்களில் பொதுவான ஒரு வார்த்தையாகவே மாறியது. இது மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்ததோடு, கிட்டத்தட்ட 40 லட்சம் மக்களைக் கொன்று குவித்துள்ளது. இந்த வைரஸின் தோற்றம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவின் வுஹானில் உள்ள வெட் மார்க்கெட் என்று அழைக்கப்படும் ஈரமான உணவு சந்தையில் தோன்றியதாக கூறப்பட்டது. பின்னர் அந்த பகுதி மிக விரைவில் நோயின் மையமாக மாறியது. மெதுவாக மற்ற ஆசிய நாடுகளுக்கும், பின்னர் மேற்கு நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது.
சுமார் ஒரு வருடத்தில், 112 மில்லியன் மக்களை இந்த கொடிய வைரஸ் பாதித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கிட்டத்தட்ட 2.49 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். உலக நாடுகள் இந்த கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடி, அதன் பரவலை தடுக்க அவசர நிலை பயன்பாடாக தடுப்பூசியை உருவாக்கி நிர்வகித்து வரும் நிலையில் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது அலைகள் காரணமாக அனைத்து நாடுகளையும் இக்கட்டான சூழலுக்கு கொண்டு சென்றது. மேலும் உலக சுகாதார அமைப்பு அதன் தோற்றத்தைக் கண்டறிய முயற்சித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில், உலக சுகாதார அமைப்பின் சார்பாக பணியாற்றும் புலனாய்வாளர்கள் குழு சீனாவின் மத்திய நகரமான வுஹானில் உள்ள ஒரு பெரிய வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தை பார்வையிட்டது. COVID-19 தொற்றுநோயின் தோற்றம் குறித்த தடயங்களைத் தேடியது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு ஆய்வக கசிவு காரணமாக அந்நகரத்தில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக வெளியான பல சதி கோட்பாடுகளை ஆராய்ந்தது.
எவ்வாறாயினும், ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி போன்ற "குளிர்-சங்கிலி தயாரிப்புகள்" ஆரம்ப கால பாதிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்ற ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூற்றை WHO அமைப்பின் புலனாய்வாளர்கள் ஆதரித்துள்ளனர். WHO குழுவின் தலைவரான பீட்டர் எம்பரேக் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். வைரஸ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஒரு ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசிவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கலாம் என்றும் இந்த சதி கோட்பாட்டிற்கு மேலதிக ஆய்வை மேற்கொள்ளக்கூடாது என்றும் சீனா சார்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய விஞ்ஞானி, டேனியல் ஆண்டர்சன் மத்திய சீனாவில் கோவிட் -19 இன் முதல் பாதிப்பு குறித்த செய்தி வெளிவருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் உலகின் மிக மோசமான ஆய்வகமாக மாறிய வைராலஜி நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியின் பிஎஸ்எல் -4 ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்ட ஒரே வெளிநாட்டு விஞ்ஞானி தான் ஆண்டர்சன். இந்த ஆய்வகம் கிரகத்தின் மிக மோசமான நோய்க்கிருமிகளைக் கையாளக்கூடிய சீனாவின் பிரதான நிலப்பரப்பில் முதன்மையான ஆய்வகம் ஆகும். அங்கு பணிபுரிந்து வந்த ஆண்டர்சனின் பதவிக்காலம் நவம்பர் 2019 இல் முடிவடைந்தது.
இந்த நிலையில் ஆண்டர்சன் ப்ளூம்பெர்க் பத்திரிகையிடம் தனது முதல் அறிக்கை மூலம் ஊடகங்களுக்கு தெரிவித்தாவது, தான் ஆய்வகத்தை சந்தேகத்திற்கிடமாகக் காணவில்லை என்று தெரிவித்தார். இது சலிப்பைத் தருவதாக இல்லை. ஆனால் இது ஒரு வழக்கமான ஆய்வகமாகும். இது வேறு எந்த உயர் கட்டுப்பாட்டு ஆய்வகத்தையும் போலவே செயல்பட்டது என்று தெரிவித்தார்.
வைரஸ் பரவத் தொடங்கியபோது வுஹானில் தான் ஆண்டர்சன் இருந்துள்ளார். அவர் தினமும் ஆய்வகத்திற்கு வருகை தந்ததால், ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் பலருடன் அவர் நெருக்கமாக இருந்தார். சீன அறிவியல் அகாடமியில் ஒவ்வொரு காலையிலும் ஒரு பெரிய குழுவின் ஒரு அங்கமாக இருந்துள்ளார். ஆண்டர்சன் தனது சக ஊழியர்களுடன் தவறாமல் தொடர்பில் இருப்பதையும் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது, "நாங்கள் ஒன்றாக மதிய உணவு மற்றும் இரவு உணவிற்குச் செல்வோம். ஆய்வகத்திற்கு வெளியே ஒருவரை ஒருவர் பார்த்தோம்," என்று ப்ளூம்பெர்க்கிடம் குறிப்பிட்டுள்ளார்.
Also read... Diana Award: ஏழை மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள உதவிய இந்திய வம்சாவளி சிறுவனுக்கு டயானா விருது!
அந்த சமயம் விஞ்ஞானிகளில் யாருக்காவது வைரஸ் தொற்று இருந்திருந்தால், தனக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் ஆண்டிசன் ஒருபோதும் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்படவில்லை. இது குறித்து பேசிய அவர், "எனது ஆய்வக ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால், நான் நோய்வாய்ப்பட்டிருப்பேன் என்று கருதுகிறேன். ஆனால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நான் தடுப்பூசி போடுவதற்கு முன்பு சிங்கப்பூரில் கொரோனா வைரஸுக்கு பரிசோதிக்கப்பட்டேன். அப்போது கூட எனக்கு பாதிப்பு ஏற்படவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
மேலும் பேசிய அவர், எந்தவொரு வைரஸும் வேண்டுமென்றே மக்களைப் பாதிக்கவில்லை என்றும் வேண்டுமென்றே வெளியிடப்படவில்லை என்றும் ஆண்டர்சன் உறுதியாக நம்புவதாக தெரிவித்தார். தொற்றுநோயின் தோற்றம் குறித்து வெளிவந்த மிகவும் குழப்பமான கோட்பாடுகளில் இதுவும் ஒன்று எனக் குறிப்பிட்டார். ஆனால் ஆய்வக கசிவு குறித்து போதுமான ஆதாரங்கள் வழங்கப்பட்டால் அதனை நம்பலாம் என்றும் இல்லையெனில் இது போன்ற வதந்தியை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் உலகின் பல்வேறு பகுதிகளில் SARS-CoV2 வெடித்ததாக சீனா கூறியிருந்தது. ஆனால் முதன் முதலில் இது தொடர்பாக அறிக்கை அளித்ததும் சீனா தான். ஒரு தொற்றுநோயாக மாறுவதற்கு முன்னர் வுஹானில் கொடிய தொற்று தோன்றியது என்ற பரவலான கருத்தை அந்நாடு முதலில் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதனை எல்லா விஞ்ஞானிகளும் உறுதியாக நம்பவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதத்தில், 18 விஞ்ஞானிகள் கோவிட் -19 இன் தோற்றம் குறித்த விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டனர். அந்த ஆய்வறிக்கையில், “ஒரு ஆய்வகத்திலிருந்து தற்செயலாக விடுவிக்கப்பட்ட கோட்பாடுகள் மற்றும் ஜூனோடிக் ஸ்பில்ஓவர் இரண்டும் சாத்தியமானவை. எதிர்கால வெடிப்புகளின் அபாயத்தைத் தணிக்க உலகளாவிய உத்திகளைத் தெரிவிக்க COVID-19 எவ்வாறு வெளிப்பட்டது என்பதை அறிவது மிகவும் முக்கியமானது. " என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.