முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஃபார்முலா ஒன் ரேஸ் மாடல் வாகனத்தில் பால் டெலிவரி செய்யும் இளைஞரை சந்திக்க விரும்பும் ஆனந்த் மஹிந்திரா!

ஃபார்முலா ஒன் ரேஸ் மாடல் வாகனத்தில் பால் டெலிவரி செய்யும் இளைஞரை சந்திக்க விரும்பும் ஆனந்த் மஹிந்திரா!

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

Anand Mahindra Viral Video | ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்வீட்டிற்கு நெட்டிசன்கள் பலரும் பலவிதமான பதில்களை அளித்துள்ளனர்.

  • Last Updated :

138 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் திறமைக்கும், சாதனையாளர்களுக்கும் பஞ்சமே கிடையாது என்பதை அவ்வப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோக்களே நமக்கு உணர்த்திவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோவை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பார்க்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்தியாவின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா சோசியல் மீடியாவில் படு சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்த செய்தி. தனது பிசியான வேலைகளுக்கு நடுவிலும், திறமையாளர்களை பாராட்டுவதற்கும், இந்தியாவின் பெருமைகளை பறைசாற்றும் நிகழ்வுகளை பகிர்வதற்கும் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார். அதேபோல் சமூகத்திற்கு ஊக்கமளிக்க கூடிய வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். எனவே தான் அவர் இந்த வீடியோவை பார்த்தே ஆக வேண்டும் என நெட்டிசன்கள் நச்சரிக்கின்றனர்.

அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர், ஃபார்முலா 1 ரேஸின் போது பயன்படுத்தப்படும் கோ கார்ட் வாகனத்தில் கேன்களை அடுக்கி வைத்து பால் விற்பனை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ‘ரோட்ஸ் ஆப் மும்பை’ என்ற ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் “ நீங்கள் ரேஸ் கார் பந்தய வீரராக மாற நினைக்கிறீர்கள்... ஆனால் உங்கள் குடும்பத்தினர் பால் வியாபாரத்திற்கு துணையாக இருக்க சொல்கிறார்கள் என்றால்... இதுதான் நடக்கும்” என்ற வேடிக்கையான கேப்ஷனும் கொடுத்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களில் ஒருவர் சமீபத்தில் பிரபல உணவு நிறுவனம் அறிவித்த 10 நிமிட டெலிவரி சேவைக்கு இந்த வாகனம் ஏற்றதாக இருக்கும் என கமெண்ட் செய்துள்ளார்.

இந்த புதுமையான பால் டெலிவரி முறையால் கவரப்பட்ட பலரும், கமெண்ட் செக்‌ஷனில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

நெட்டிசன்களின் இந்த தொடர் முயற்சிக்கு வெற்றியாக ஆனந்த் மஹிந்திராவும் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வழக்கமான பாராட்டுக்களுடன் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ள ட்வீட்டில், "அவரது வாகனம் சாலை விதிமுறைகளை பின்பற்றுகிறதா? என்பது எனக்கு தெரியவில்லை, ஆனால் சக்கரங்கள் மீதான அவரது ஆர்வம் கட்டுப்பாடற்றதாகவே இருக்கும் என்று நான் நம்புகிறேன்... இது நான் நீண்ட காலமாக பார்த்து வரும் விஷயங்களிலேயே மிகவும் சிறந்தது. இவரை நான் சந்திக்க விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்வீட்டிற்கு நெட்டிசன்கள் பலரும் பலவிதமான பதில்களை அளித்துள்ளனர். சிலர் அந்த இளைஞர் பாதுகாப்பு நடவடிக்கையை பின்பற்றியதால் தான் ஹெல்மேட் அணிந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். ட்விட்டர் யூஸர்களில் ஒருவர் இளைஞரின் ‘மில்க் மொமைல்’ பேட்மேனின் ‘பேட் மொபைலை’ அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறிப்பிட்டுள்ளார்.

top videos

    இதில் ஒரே ஒருவர் மட்டும், “அவர் சாலை விதிகளை பின்பற்றினால் என்ன, பின்பற்றாவிட்டால் என்ன உங்களுக்கு பிசினஸுற்காக சந்தித்து ஆக வேண்டும் அவ்வளவு தானே” என ஆனந்த் மஹிந்திராவை விமர்சித்து பதிவிட்டுள்ளார். பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்களால் நிரம்பி வழியும் இந்த வீடியோவை இதுவரை 6.61 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு களித்துள்ளனர்.

    First published:

    Tags: Anand Mahindra, Milk, Viral Video