"பயாலஜி கிளாஸ் ஹேப்பி… மேக்ஸ் கிளாஸ் போர்" - பட்ஜெட் ரியாக்‌ஷன்களை கலாய்க்கும் மீம்ஸ்..

"பயாலஜி கிளாஸ் ஹேப்பி… மேக்ஸ் கிளாஸ் போர்" - பட்ஜெட் ரியாக்‌ஷன்களை கலாய்க்கும் மீம்ஸ்..

ராகுல் காந்தி

பட்ஜெட் உரையின்போது ராகுல்காந்தி கொடுத்த 'போர்' ரியாக்ஷனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

  • Share this:
நடிகர் திலகம் சிவாஜி பேசும் வசனத்தில் கூற வேண்டுமென்றால் அரசியல் தலைவர்களையும், மீம்ஸையும் பிரிக்க முடியாது. குறிப்பாக, பிப்ரவரி 1 ஆம் தேதியான இன்று, மீம் கிரியேட்டர்களுக்கான நாள் என்றே கூறலாம். அந்தளவுக்கு அவர்களுக்கு இன்று கன்டென்ட் கிடைத்துள்ளது.  நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தது முதல் அதில் இடம்பெற்ற திட்டங்கள், அவர் பேசிய வார்த்தைகள், ராகுலின் ரியாக்ஷன் என அனைத்தும் டிரோல்களாக இணையத்தில் உலா வருகின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் 2021 -22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அப்போது, கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பற்றி பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நோபல் பரிசு பெற்ற மேற்கு வங்க கவிஞர் ரவீந்திரநாத்தின் கவிதையை மேற்கோள் காட்டி பேசினார். இதனை கன்டென்டாக எடுத்துக்கொண்ட நெட்டிசன்கள், மேற்கு வங்க தேர்தலுக்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரவீந்திரநாத்தின் கவிதைகளை குறிப்பிடுவதாக கூறியுள்ளனர். மேலும், மேற்கு வங்க பெண்கள் அணியும் உடையை அவர் அணிந்திருந்ததும் மேற்கு வங்க தேர்தலுக்காகத்தான் எனக் கூறியுள்ளனர்.

அதேபோல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்தியையும் நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகின்றனர். பட்ஜெட் தாக்கல் செய்தபோது, ராகுல் மிகவும் சோர்வாக இருப்பதுபோல் இருந்துள்ளார். இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் கன்டென்டாக எடுத்துக்கொண்டுள்ளனர். கடந்த பட்ஜெட் தாக்கலின்போது கண்ணில் சைகை செய்த போட்டோவையும், இன்று சோர்வாக அமர்ந்திருந்த போட்டோவையும் ஒப்பிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், பயாலஜி வகுப்பில் மாணவர் ஹேப்பியாக இருப்பார், அதே கணக்கு வகுப்பு என்றால் இப்படி அமர்ந்திருப்பார் என கலாய்த்துள்ளார்.

 

மற்றொருவர், நான் ஆன்லைன் வகுப்பில் இருக்கும்போது இப்படிதான் இருப்பேன் என ராகுலின் போட்டோவைப்போட்டு கூறியுள்ளார்.

 யூ.பி.எஸ்.சிக்கு தயாராகும் மாணவர் ஒருவர், அரசியல் பாடத்தை ரிவிஷன் செய்யும்போது இப்படித்தான் இருப்பார் எனக் கூறியுள்ளார்

 


கல்லூரிகளில் மதிய வகுப்புக்கு பிறகு மாணவர் அமர்ந்திருப்பதுபோல் ராகுல்காந்தி அமர்ந்திருப்பதாக நெட்டிசன் கலாய்த்துள்ளார்.

 

நடுத்தர மக்களுக்கும், சம்பளதாரர்களுக்கும் வரிச்சலுகை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய பட்ஜெட்டில் வரி தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இது நடுத்தர மற்றும் மாத ஊதியதாரர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அதேவேளையில், மத்திய அரசின் பட்ஜெட் நாட்டை பின்நோக்கி அழைத்து செல்லும்வகையில் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நாட்டை மீட்பதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் சாடியுள்ளனர்.

 

 
Published by:Tamilmalar Natarajan
First published: