மணமகளை மட்டும் போட்டோ எடுத்த புகைப்படக்காரர்: ஆத்திரத்தில் அடித்த மணமகன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

மணமகளை மட்டும் போட்டோ எடுத்த புகைப்படக்காரர்: ஆத்திரத்தில் அடித்த மணமகன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

45 வினாடிகள் நீளமுள்ள இந்த வீடியோ பலரையும் சிரிக்க வைத்துள்ளது. நிச்சயமாக இந்த வீடியோ உங்களையும் சிரிக்க வைக்கும்.

45 வினாடிகள் நீளமுள்ள இந்த வீடியோ பலரையும் சிரிக்க வைத்துள்ளது. நிச்சயமாக இந்த வீடியோ உங்களையும் சிரிக்க வைக்கும்.

  • Share this:
சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது உண்டு. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட திருமணம் தொடர்பான வீடியோ நெட்டிசன்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. 45 வினாடிகள் நீளமுள்ள இந்த வீடியோ பலரையும் சிரிக்க வைத்துள்ளது. நிச்சயமாக இந்த வீடியோ உங்களையும் சிரிக்க வைக்கும்.

வீடியோவில், திருமண விழாவில் மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோர் மேடையில் புகைப்படம் எடுக்க நிற்கின்றார்கள். புகைப்படக்காரர் மணமகனை விட்டுவிட்டு மணமகளை மட்டும் புகைப்படம் எடுக்கிறார். அதேநேரம், மணமகளின் நாடியை தொட்டு புகைப்படம் எடுக்கிறார். இதனை சில வினாடிகள் பொறுத்துப் பார்த்த மணமகன் திடீரென கோபமாக புகைப்படக்காரரின் முதுகில் ஓங்கி ஒரு அடியை வைக்கிறார். `உங்களால் அங்கிருந்து புகைப்படம் எடுக்க முடியாதா’ என்று கேட்கிறார். இதனைப் பார்த்த மணமகள் மேடையிலேயே விழுந்து விழுந்து சிரிக்கிறார்.நெட்டிசன்கள் பலரையும் கவர்ந்த இந்த வீடியோவை ட்விட்டர் பயனர் ஒருவர் `ஐ ஜஸ்ட் லவ் திஸ் பிரைட்’ என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை 8 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பார்த்துள்ளனர். 65,000-க்கும் மேற்பட்ட நபர்கள் லைக் செய்துள்ளனர். 15,000-க்கும் மேற்பட்டவர்கள் ரீ-ட்வீட் செய்துள்ளனர். `தி வைஃப் இஸ் லெஜண்ட், அங்கிருந்த சூழலை மிகவும் சிறப்பாக கையாண்டுள்ளனர், போட்டோகிராபர்ஸ் பிவேர்” போன்ற கமெண்டுகளை நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பான மீம்களும் சமூக வலைதளத்தில் வைரலாக தொடங்கியுள்ளன.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: