முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / தேசிய ட்ரெண்டிங்கில் #TalibanOurGuardians: வேலையைக் காட்டிய பாகிஸ்தான் நெட்டிசன்கள்! 

தேசிய ட்ரெண்டிங்கில் #TalibanOurGuardians: வேலையைக் காட்டிய பாகிஸ்தான் நெட்டிசன்கள்! 

தாலிபன்கள்

தாலிபன்கள்

#TalibanOurGuardians என்ற ஹேஷ்டேக்கை பாகிஸ்தானியர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நேற்று இந்த ஹேஷ்டேக் அந்நாட்டில் தேசிய அளவில் நம்பர்1 இடத்தை பிடித்தது.

  • Last Updated :

தலிபான் பயங்கரவாதிகளை தங்கள் பாதுகாவலர்கள் என கூறும் வகையில் #TalibanOurGuardians என்ற ஹேஷ்டேக் பாகிஸ்தானில் ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேறிய பிறகு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பின் துணையுடன் தலிபான் அமைப்பு 1996ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது. அதன் பின்னர் பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கன் மாறியது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை நடத்திய ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக நேச நாட்டின் படைகளை அனுப்பி 2001-ல் ஆப்கனை கைப்பற்றியது அமெரிக்கா.

அப்போதிலிருந்து ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. தலிபான் அமைப்பினருக்கும், ஆப்கன் பாதுகாப்புப்படையினருக்கும் இடையிலான மோதலில் இதுவரை பல ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் தலிபான்களின் கொட்டத்தை அடக்க அமெரிக்க படையினர், ஆப்கன் பாதுகாப்புப் படைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் அமெரிக்க படைகள் முழுமையாக வாபஸ் பெறப்படுவார்கள் என அமெரிக்கா அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறது.

Also Read:   Break Up-ஆல் வந்த வினை: காதலரின் சீக்ரெட்களை போட்டுக்கொடுத்து அலுவலக வேலைக்கு ஆப்பு வைத்த காதலி!

இந்நிலையில் தலிபான்களை தங்கள் பாதுகாவலர்கள் என கூறும் #TalibanOurGuardians என்ற ஹேஷ்டேக்கை பாகிஸ்தானியர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நேற்று இந்த ஹேஷ்டேக் அந்நாட்டில் தேசிய அளவில் நம்பர்1 இடத்தை பிடித்தது.

அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஹூசைன் ஹக்கானி, இது மிகவும் அபாயகரமானது என்று கூறினார். மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், ஷா முகமது குரேஷியும் ஆப்கானிஸ்தானில் தலிபான் வெற்றி பெறக்கூடாது என பொய்யாக கூறி வருவதாகவும் தெரிவித்தார். இம்ரான் கானின் கட்சியினர் இதனை ட்ரெண்ட் செய்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    இந்த ட்ரெண்ட் தொடர்பாக பஷ்டுன் டஹாஃபுஸ் இயக்க தலைவர் மோஹ்சின் தவார் கூறுகையில், தலிபான்கள் செய்த நாசவேலைகளை நியாயப்படுத்த முடியாது. ஆப்கானில் அமைதியும், நம்பிக்கையும் பிறக்க வேண்டும் என்றால் தலிபான்களின் சரணாலயங்கள் தகர்க்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    First published:

    Tags: Afghanistan, ISI, Islamic Jihad Militant, Pakistan News in Tamil, Taliban, Trending, Twitter