• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • இப்படிலாம் பண்ணுவாங்களா.. ஃபாண்டா ஆம்லெட்டை பார்த்து அலறும் நெட்டிசன்கள்..

இப்படிலாம் பண்ணுவாங்களா.. ஃபாண்டா ஆம்லெட்டை பார்த்து அலறும் நெட்டிசன்கள்..

 ஃபாண்டா ஆம்லெட்

ஃபாண்டா ஆம்லெட்

குஜராத்தில் இருக்கும் சாலையோர உணவகத்தில் ஃபாண்டா ஆம்லெட் போடும் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அலறி வருகின்றனர்.

  • Share this:
ஆரோக்கியமான உணவான முட்டையில் ஏற்கனவே பல ரெசிப்பிகள் இருக்கின்றன. ஆம்லெட், ஆப்பாயில், கலக்கி என நீளும் அந்தப் பட்டியலில் புதிதாக ஒரு ரெசிபி இணைந்துள்ளது. இந்த ரெசிபியை இதற்கு முன்பு நீங்கள் கேள்விப்படிருக்கவும் மாட்டீர்கள், யோசித்திருக்கவும் வாய்ப்பில்லை. அப்படி என்ன அந்த ரெசிபி? என கேட்கிறீர்களா. அந்த ரெசிபியின் பெயர் ஃபாண்டா ஆம்லெட். என்ன பாண்டா ஆம்லெட்டா? என நீங்கள் கேட்கலாம். ஆனால், சூரத்தில் சாலையோரக் கடை ஒன்றில் தயாரிக்கப்படும் பாண்டா ஆம்லெட், இணையத்தை கலக்கி வருகிறது.

பாண்டாவைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வித்தியசமான ஆம்லெட்டை சாப்பிட உணவுப்பிரியர்கள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, வித்தியாசமான உணவுகளை படம்பிடிக்கும் யூ டியூபர்களுக்கு சிறந்த கன்டென்டாக தற்போது பாண்டா ஆம்லெட் சிக்கியிருக்கிறது. டிவிட்டரில் @Agabaai என்ற ஐடியில் பகிரப்பட்டுள்ள பாண்டா ஆம்லெட் வீடியோ சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த வீடியோவில், குறிப்பிட்ட கடையில் முட்டையைக் கொண்டு தயாரிக்கப்படும் அனைத்து ரெசிபிக்களும் இடம்பெற்றுள்ளன. வீடியோவின் இறுதியில் வரும் பாண்டா முட்டை ஆம்லெட், குறிப்பாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த ரெசிபிக்கு ஆதரவைக் காட்டிலும், இணையத்தில் அதிகம் எதிர்ப்புகளே பதிவாகி வருகின்றன. உணவு என்பது உடல் ஆரோக்கியத்துக்காக சாப்பிடுவது. வித்தியாசமான ரெசிபியை தயாரிக்கிறோம் என்ற பெயரில் கார்பனேட்டேட் டிரிங்குடன், முட்டையை சேர்த்து சமைப்பது என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை நெட்டிசன் கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசன் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்த மாதிரியான வித்தியாசமான ரெசிபிக்களை தங்களுடைய எதிரிகளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.




ஃபாண்டா ஆம்லெட் வித்தியாசமாக இருப்பது ஒருபுறம் வைரலாக பரவினாலும், அதனுடைய விலை கேட்பவர்களின் தலையை கிறுகிறுக்க வைக்கிறது. ஒரு பாண்டா ஆம்லெட்டின் விலை சுமார் 250 ரூபாய். பாண்டாவை ஊற்றி ஆம்லெட் தயாரிப்பதைத் தவிர வேறு என்ன ஸ்பெஷல் அந்த ரெசிபியில் இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ள நெட்டிசன்கள், இந்த மாதிரியான ரெசிப்பிக்களை ஊக்குவிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த உணவின் தரம் குறித்தும் அதிகாரிகள் பரிசோதனை செய்ய வேண்டும் என பலர் வலியுறுத்தியுள்ளனர்.

Also read : பலூன்களுடன் வீட்டிற்குள் பறந்த குழந்தை -வைரலாகும் வீடியோ

கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்த பலர், என்ன செய்வதென்று தெரியாமல் வித்தியாசமான உணவுகளை தயார் செய்து யூடியூப்களில் பதிவேற்றி வருகின்றனர். அந்த வகையில் கோகோ கோலா ஆம்லெட், டிக்கிலோனா டீ போன்ற உணவுகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. டிரெண்டிங் வீடியோக்களுக்கு மட்டுமே இந்த ரெசிபிக்கள் சரியாக இருக்கும் என கூறியுள்ள நெட்டிசன்கள், நாள்தோறும் சாப்பிடுவதற்கு உகந்ததாக இருக்காது எனத் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: