”யப்பா பாகிஸ்தான் நெட்டிசன்களே...” கற்பனையா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

”யப்பா பாகிஸ்தான் நெட்டிசன்களே...” கற்பனையா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
வீடியோ காட்சிகள்
  • News18
  • Last Updated: September 7, 2019, 5:55 PM IST
  • Share this:
விராட் கோலி, தவான், ஜடேஜா ஆகியோர் பாகிஸ்தான் அணியில் விளையாடுவது போல அந்நாட்டு நெட்டிசன்கள் உருவாக்கியுள்ள ஒரு கற்பனை வீடியோ இரு நாட்டிற்கு இடையே இணையப் போரை உண்டாக்கியுள்ளது.

காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படையினர் அதிரடி பதிலடி தாக்குதல்களை நடத்தினர். இதில், பல பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து, நடந்த அடுத்தடுத்த சம்பவங்களால் இரு நாடுகள் இடையேயான விரிசல் மிகவும் பெரியதானது.

இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்ட நிலையில், சர்வதேச நாடுகள் தலையீட்டால் பதற்றம் குறைந்தது. எனினும், இயல்பு நிலை திரும்பவில்லை. மீண்டும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட இரு நாடுகளுக்கு இடையேயான உறவு முறிந்தது என்று கூட சொல்லலாம்.


அந்த வகையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ரயில்கள் நிறுத்தப்பட்டன. தூதரக ரீதியிலான பரிமாற்றங்களும் குறைந்தன. ஒருபக்கம் இரு நாட்டு அரசுகள் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்த நிலையில், நெட்டிசன்கள் இணையப்போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானை கிண்டல் செய்து இங்கிருந்து மீம்ஸ்கள், வீடியோக்கள் பரப்பப்படும் நிலையில், அவர்களும் மீம்ஸ், வீடியோ என்று முடிந்த அளவுக்கு பதிலடி கொடுக்கின்றனர். எனினும், இந்தியாவில் நெட்டிசன்கள் அதிகம் என்பதால், பாகிஸ்தான் நெட்டிசன்களால் சில நேரங்களில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இணைய நிலை இப்படி இருக்க, பாகிஸ்தானியர்கள் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ நம்மை தரையில் விழுந்து உருண்டு புரண்டு சிரிக்க வைத்துள்ளது. கனவு என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? என்று வடிவேலு ஒரு காமெடி சீனில் கேட்பது போல, கற்பனை என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? என்று அவர்களைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது.2025 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானும், இங்கிலாந்தும் மோதுவது போல தொடங்கும் வீடியோவில் நமக்கு காத்திருக்கும் முதல் அதிர்ச்சியே போட்டி ஸ்ரீநகரில் நடக்கிறது என்பதுதான். சரி.. போய்த்தொலையுது என்று வீடியோயை ஓடவிட்டால், பாகிஸ்தான் அணியில் கோலி, தவான், ஜடேஜா ஆகியோர் வரிசை கட்டி நிற்கின்றனர்.

அதாவது, இந்தியாவை போரில் வென்று பாகிஸ்தான் இந்தியாவை கைப்பற்றியதால், இந்தியர்கள் எல்லோரும் பாகிஸ்தானியர்கள் ஆகிவிட்டார்களாம்.

First published: September 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்