Home /News /trend /

நிறைமாத கர்ப்பத்திலும் தீவிர உடற்பயிற்சியில் அசத்தும் சோனம் கபூர்.. வைரலாகும் வீடியோ

நிறைமாத கர்ப்பத்திலும் தீவிர உடற்பயிற்சியில் அசத்தும் சோனம் கபூர்.. வைரலாகும் வீடியோ

கர்ப்பக்காலத்தில் சோனம் கபூரின் ஒர்க் அவுட் வீடியோ

கர்ப்பக்காலத்தில் சோனம் கபூரின் ஒர்க் அவுட் வீடியோ

Sonam Kapoor | சோனம் கபூர், கருப்பு நிற சாதாரண டி-ஷர்ட் மற்றும் கருப்பு ஜிம் டைட்ஸில் தனது உடற்பயிற்சி டைரிகளின் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்.

  பாலிவுட் நடிகையான சோனம் கபூருக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்கவுள்ள நிலையில், தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இவரின் சமீபத்திய ஒர்க் அவுட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

  பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார்களாக வலம் வந்த அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகள் தான் சோனம் கபூர். வாரிசு நடிகையாக இந்தி திரையுலகில் சாபரியா என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு பிலிம்பேர் நடிகைக்கான சிறந்த அறிமுக விருது கிடைத்தது. இதனையடுத்து பேட் மேன், சஞ்சு, ரான்ஜானா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்ததோடு தற்போது பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்த இவர் தொழிலதிபரான ஆனந்த அகுஜா என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார்.

  இதன் பின்னர் திருமணம் மற்றும் சினிமா வாழ்க்கை என இரண்டையும் சமாளித்து வலம் வந்துக்கொண்டிருந்த சோனம் கபூர், கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய குழந்தையின் வரவேற்பிற்காகக் காத்திருப்பதாகவும், இந்த கர்ப்பமான விஷயத்தை வித்தியாசமான முறையில் சோசியல் மீடியாவில் பதிவிட்டது ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. அந்த பதிவில், கர்ப்பமான வயிற்றுடன் சோனம் தன்னுடன் கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தோடு, கர்ப்ப காலம் என்பது அழகானதுதான் எனவும் கஷ்டமான காலம் என்றாலும் இன்பமுடன் வரவேற்பதாகத் தெரிவித்திருந்தார்.

  Read More : சோஷியல் மீடியாக்களில் கிண்டலடித்து ட்ரோல் செய்யப்படும் நடிகை பிரியங்கா சோப்ராவின் புதிய பிசினஸ்..! ஏன் தெரியுமா.?


   
  View this post on Instagram

   

  A post shared by Sonam Kapoor Ahuja (@sonamkapoor)
  மேலும் இங்கு நான்கு கைகள் உள்ளது எனவும் எங்களால் இயன்றவரை உன்னை உயர்த்துவோம் என்றும் இரண்டு இதயங்கள் உன்னுடைய ஒவ்வோர் அடியிலும் அது ஒன்றாய் துடிக்கும் என பதிவிட்டு இருந்தார். இவ்வாறு தன்னுடைய கர்ப்ப கால அனுபவங்கள் மற்றும் நடக்கும் விஷயங்களையெல்லாம் குறித்து தொடர்ச்சியாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து வரும் நிலையில், தற்போது கர்ப்பிணிப் பெண்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான ஹோம் ஸ்ட்ரெட்ச் ஒர்க் அவுட் முறையை “The most beautiful mama to be @ sonam kaboor, Home stretch SK.. we got this“என்ற தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார்.  அதில், சோனம் கபூர், கருப்பு நிற சாதாரண டி-ஷர்ட் மற்றும் கருப்பு ஜிம் டைட்ஸில் தனது உடற்பயிற்சி டைரிகளின் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில் அவர் ஒரு முழங்காலை மடித்தும், மற்றொரு காலை வளைத்து தரையில் வைத்து அமர்வது போன்ற ஒர்க் அவுட்டைச் செய்திருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தன்னுடைய அடுத்த பதிவில், ஆரோக்கியமாக வீட்டில் சமைத்த உணவு முறைக்குறித்தும் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், நல்ல ஒர்க் அவுட் எனவும், மற்ற பெண்களுக்கு நல்ல உதாரணமாக விளங்குகிறார் எனவும் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.  பாலிவுட் நடிகையான சோனம் கபூருக்கு வருகின்ற ஆகஸ்ட் மாதம் குழந்தைப்பிறக்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அனுபவங்களையும் வீடியோக்களாக பதிவிட்டுவருகின்றனர். மேலும் சமீபத்தில் இத்தாலி சென்ற சோனம் மற்றும் ஆனந்த அஹூஜா தம்பதியினரின் பேபி மூன் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

   
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Sonam Kapoor, Trending, Viral Video

  அடுத்த செய்தி