ட்ரெண்ட் ஆகும் ஆபத்தான 'பின் பேக் சேலஞ்ச்'!

news18
Updated: June 3, 2019, 12:46 PM IST
ட்ரெண்ட் ஆகும் ஆபத்தான 'பின் பேக் சேலஞ்ச்'!
பின் பேக் சேலஞ்ச்
news18
Updated: June 3, 2019, 12:46 PM IST
கடந்த ஆண்டு உலகையே ஆட்டிப் போட்டது KIKI சேலஞ்ச். அதற்கு ஈடாக தற்போது வைராகி வருகிறது பின் பேக் சேலஞ்ச்.

இந்த பிங் பேக் சேலஞ்ச் ( Bin bag challenge ) என்பது குப்பைகளை வீசி எறியப் பயன்படுத்தும் குப்பைத் தொட்டிக் கவரில் தன் உடல் முழுவதையும் மறைக்குமாறு அதில் அமர்ந்து கொள்ள வேண்டும்.

தலை மட்டும் வெளியே இருக்க வேண்டும். பின்னர் வீட்டில் தூசிகளைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் வேக்யூம் கிளீனரை தாங்கள் அமர்ந்தவாறு இருக்கும் பைக்குள் உட்செலுத்து அதில் உள்ள காற்றை உறிஞ்ச வேண்டும்.


அவ்வாறு உறிஞ்சும்போது அந்த பையானது உடலோடு உடலாக ஒட்டிக் கொள்கிறது. அந்த சமயத்தில் எவ்வளவு நேரம் தன் மூச்சை இழுத்துப் பிடித்துத் தாக்குப்பிடிக்கிறார்கள் என்பதுதான் சேலஞ்ச்.Loading...

 
View this post on Instagram

 

A post shared by meatman80 (@meatman80) on


இதை கேட்பதற்கும் பார்பதற்கும் எளிமையாக இருந்தாலும் பெரிய அளவில் ஆபத்தும் கூட. பையினுள் இருக்கும் காற்றை உள்ளிழுக்கும்போது அது உங்களை நெறுக்குவது போன்று இருக்கும். முற்றிலும் ஆக்ஸிஜனின்றி இருப்பதால் அது எந்த வகையிலும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

இத்தனை பின் விளைவுகள் இருந்தும் இதை மக்கள் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். மற்றவர்களையும் செய்யத் தூண்டுகின்றனர் என்பதுதான் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...