முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பூனையா? மானா.? – உங்க கண்ணுக்கு ஏதாவது தெரிகிறதா.?

பூனையா? மானா.? – உங்க கண்ணுக்கு ஏதாவது தெரிகிறதா.?

Optical Illusion

Optical Illusion

Optical Illusion Image | எங்களுக்கு எந்த விலங்கின் முகமும் தெரியவில்லை என்று பல யூசர்கள் வருத்தமாக பதிவிட்டு வருகின்றனர். அதையும் சிலர் வேடிக்கையாக, எங்களுக்கு எந்த முகமுமே தெரியவில்லை. அப்படி என்றால் எங்களுக்கு மூளையே கிடையாதா ? என்று பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

சமீபகாலமாக, சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரையும் தலை சுற்ற வைக்கும் வகையிலான ஆப்டிக்கல் இல்யூஷன் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு ஓவியத்தில் மறைத்திருக்க வேண்டியதை கண்டுபிடிப்பதாகட்டும் அல்லது அதில் உள்ள புதிருக்கு தீர்வு தருவதாகட்டும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் எப்போதுமே நம் கவனத்தை ஈர்ப்பவையாகவே அமைகின்றன. புதிர்கள், மைண்ட் கேம்கள் மற்றும் சுடோகு போன்றவற்றைத் தீர்ப்பதில் உள்ள சுவாரஸ்யங்களை விட ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மூளைக்கு சிறந்த சவாலாக உள்ளன. ஆப்டிக்கல் இல்யூஷன் புதிர்கள் அனைத்துமே திறமையாளர்களால் வடிவமைக்கப்பட்ட படங்கள் மற்றும் ஓவியங்கள் ஆகும்.

சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள், என்ன புகைப்படங்கள் இருக்கின்றன என்பதே புரியாத அளவுக்கு ஒளிந்திருக்கும் முகத்தைத் தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும். அப்படிப்பட்ட ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படம் ஒன்று, படத்தில் உங்களுக்குத் தெரிவது பூனையா அல்லது கடமானா என்ற கேள்வியுடன் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இன்றைய டிரெண்டாக இருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் மற்றொரு பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு சவால் விடுத்துள்ளது. அதாவது, இதில் தெரியும் விலங்கின் படத்தின் அடிப்படையில் உங்களுடைய எந்த பக்க மூளை அதிக வேலை செய்கிறது என்பதைக் குறிக்கிறது. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு, ஆப்டிக்கல் இல்யூஷனில் எந்த முகமும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

டிவிட்டரில் ஒரு யூசரால் வெளியிடப்பட்ட இந்த புகைப்படத்தில், பூனை மற்றும் கடமான் என்ற ஒரு வகை மானின் முகம் மறைந்துள்ளது. உங்களுக்கு இதில் பூனை அல்லது மூஸ் என்ற மானின் முகம் தெரியலாம். பூனையைக் கண்டுபிடித்த பலருக்கு, மூஸ் இருப்பதே தெரியவில்லை. பூனையைக் கண்டுபிடித்தவர்களுக்கு இடது மூளை அதிகமாக வேலை செய்யும் என்றும், மூசை கண்டுபிடித்தவர்களுக்கு வலது மூளை அதிகமாக வேலை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read : இந்த படத்தில் மறைந்திருக்கும் பூனையை கண்டுப்பிடிக்கவே முடியாதாம்..

எங்களுக்கு எந்த விலங்கின் முகமும் தெரியவில்லை என்று பல யூசர்கள் வருத்தமாக பதிவிட்டு வருகின்றனர். அதையும் சிலர் வேடிக்கையாக, எங்களுக்கு எந்த முகமுமே தெரியவில்லை. அப்படி என்றால் எங்களுக்கு மூளையே கிடையாதா ? என்று பதிவு செய்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் தங்களுக்குள் விவாதித்து, புகைப்படம் இருக்கும் மார்க்கை பகிருமாறு கோரியும், எனக்கு மூளை வேலை செய்யவில்லை என்று நகைச்சுவையாகவும் பதிவு செய்து வருகின்றனர்.

Also Read : இந்த படத்தில் உங்களால் ஒரு கோபமான மனிதரின் முகத்தை பார்க்க முடிகிறதா.? 

பமீலா என்ற இந்த புகைப்படத்தை பகிர்ந்த யூசர் மற்றொரு ஆச்சரியமான விஷயத்தையும் பகிர்ந்துள்ளார். பூனை மற்றும் மூஸ் முகம் அந்த இல்யூஷன் புகைப்படத்தில் இல்லை என்றும், அது நமது மூளையே கற்பனை செய்து உருவாக்கிக் கொள்கிறது என்றும் கூறியுள்ளார். அதே போல, புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தால், அந்த இல்யூஷன் மறைந்து விடும் என்றும் கூறியுள்ளார்.

First published:

Tags: Optical Illusion, Trending