ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உணவுகளின் விலை இவ்வளவு மலிவா..! -  பழைய பில் பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள்.!

உணவுகளின் விலை இவ்வளவு மலிவா..! -  பழைய பில் பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள்.!

உணவகம்

உணவகம்

Trending | பழைய விலைப்பட்டியலை கூர்ந்து கவனித்தால் நாம் ஏதோ கனவு உலகத்தில் பயணிப்பதை போன்ற மாய தோற்றம் ஏற்படும். ஏனென்றால், அப்போதைய விலை பட்டியலுக்கும், இப்போதைய விலை பட்டியலுக்கும் மலையளவு வித்தியாசம் உண்டு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காலம் மாற்றத்திற்கு ஏற்றார் போல ஒவ்வொரு பொருட்களின் விலையும் உயர்ந்து வருவது நாம் அறிந்த விஷயம் தான். அதிலும் முந்தைய காலகட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பொருட்களின் விலையையும், தற்போதைய விலை பட்டியலையும் ஒப்பிட்டு பார்த்தால் நமக்கே மிகுந்த ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்படும்.

குறிப்பாக பழைய விலைப்பட்டியலை கூர்ந்து கவனித்தால் நாம் ஏதோ கனவு உலகத்தில் பயணிப்பதை போன்ற மாய தோற்றம் ஏற்படும். ஏனென்றால், அப்போதைய விலை பட்டியலுக்கும், இப்போதைய விலை பட்டியலுக்கும் மலையளவு வித்தியாசம் உண்டு. தங்கம், நிலம், உணவு பொருள் உள்ளிட்ட அனைத்து விலைக்கும் இந்த நியதி பொதுவானதாகும்.

அந்த வகையில் சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிரப்படும் பழைய விலைப்பட்டியல் உணவுகள் குறித்து தான் இருக்கிறது. ஹரியானாவில் 37 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1985ஆம் ஆண்டில் ஹோட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட பில் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு பிளேட் சாஹி பன்னீர் ரூ.8 என்ற அளவிலும், ஒரு பிளேட் தால் மக்கானி ரூ.10க்கு குறைவான விலையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம், ஒரு நேரத்திற்கு முழு சாப்பாட்டின் செலவு ரூ.26 ஆக இருந்திருக்கிறது. இன்றைய விலை பட்டியலானது இவற்றோடு ஒப்பிடுகையில் 48 மடங்கு உயர்ந்துள்ளது.

இதே விலைக்கு இன்றைய தினம் என்ன உணவு பொருள் கிடைக்கும் என்பதை ஆராய்ந்து பார்த்தால், சாதாரணமாக ஒரு சிப்ஸ் பாக்கெட் அல்லது அரை லிட்டர் கூல்டிரிங்ஸ் மட்டுமே கிடைக்கும். பெரும்பாலான உயர்தர ரெஸ்டாரண்டுகளில் இன்றைய தினம் ஒரு சிறிய பிளேட் ஸ்டார்டர்ஸ் வாங்கினாலும் கூட அது ரூ.200-க்கும் மேற்பட்ட தொகையில் வருகிறது.

Also Read : புரூஸ் லீ மர்ம இறப்புக்கு இதுதான் காரணமா... 49ஆண்டுகள் கழித்து வெளியான ஆய்வு முடிவுகள்

கட்டுக்கடங்காமல் உயர்ந்த உணவுப் பொருட்களின் விலை

அன்றைய தினம் ஒரு பிளேட் சாஹி பன்னீர் ரூ.8 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றைய தினம் சமைக்காத பச்சையான பன்னீர் ஒரு கிலோ ரூ.370க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தினம் மேற்குறிப்பிட்ட அதே உணவுகளை நல்லதொரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டால் ரூ.1,260 என்ற அளவில் செலவாகிறது.

ஒரு பிளேட் சாஹி பன்னீர் ரூ.329 என்ற விலையிலும், ஒரு பிளேட் தால் மக்கானி ரூ.399 என்ற விலையிலும், ஒரு கிண்ணம் ராய்தா ரூ.139 என்ற விலையிலும் விற்பனை ஆகிறது. இது தவிர நீங்கள் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.

Also Read : 10 வினாடிகளில் காணாமல் போன கோழி குஞ்சை கண்டுபிடிக்க முடிந்தால் நீங்க கில்லாடி தான்!

இன்னும் மூன்று ஆண்டுகளில் இதே உணவு பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால், அதாவது 1985இல் இருந்து சரியாக 40 ஆண்டுகளில் இதே உணவுகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு பல மடங்கு உயர்ந்திருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

Published by:Selvi M
First published:

Tags: Hotel Food, Restaurant, Tamil News, Trending