ட்ரெண்டிங்

  • Associate Partner
  • deepavali
  • deepavali
  • deepavali
Home » News » Trend

#Deepavali Memes | தீபாவளி போனஸ் எப்போது? மீம்ஸ்களுடன் காத்திருக்கும் நெட்டிசன்கள்..

தீபாவளிக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் இணையத்தில் தீபாவளி மீம்ஸ் கலைக்கட்டியுள்ளது. பலரும் தங்கள் நிறுவனம் போனசிற்கு பதில் முறுக்கு, பரிசு பொருள் என கொடுப்பதாக இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

#Deepavali Memes | தீபாவளி போனஸ் எப்போது? மீம்ஸ்களுடன் காத்திருக்கும் நெட்டிசன்கள்..
தீபாவளி போனஸ் எப்போது - மீம்ஸ்களுடன் காத்திருக்கும் நெட்டிசன்கள்
  • News18 Tamil
  • Last Updated: November 12, 2020, 12:51 PM IST
  • Share this:
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், கொரோனாவால் பலர் வேலை இழந்தும், சிலர் ஊதியக் குறைப்பிலும் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான பண்டிகை போனஸ் குறித்து செய்தி வெளியிட்டது.

அதை தொடர்ந்து மாநில அரசுகள் போனஸ் அறிவித்துள்ள நிலையில், தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் சில நெட்டிசன்கள் தங்கள் இணைய பக்கத்தில், ஒரு போனஸ் வாங்க நாங்க என்னென்ன பாடு படவேண்டிய இருக்கு என பதிவிட்டு வருகின்றனர்.

 


  

  

  

  

  

  

  

  

  

  

  

ஒரு வேளை தீபாவளி முடிஞ்சபின்னாடி போனஸ் போடுவானுங்களோ? எனவும், இன்னும் ஒரு வாரந்தான் இருக்கு தீபாவளி போனஸ் இருக்கா இல்லையானு கேளு என மனது போனஸ் கேட்க தூண்டுவதாகவும் பலரும் இணையத்தில் போனஸ் குறித்து ட்வீட் செய்து வருகின்றனர்.

ALSO READ |  SchoolsReopen Trending | பள்ளிக்கூடத்த திறக்கப் போறீங்களா.. ஸ்டூடண்ட்ஸ் ரியாக்ஷன்.. இணையத்தை தெறிக்கவிடும் மீம்ஸ்..

இந்த மாத இறுதியில் தீபாவளிக்கு முன்னதாக தனது ஊழியருக்கு போனஸ் வழங்குவதாக உறுதியளித்த சில மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை அடங்கும். பண்டிகைக்கு முன்கூட்டியே மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணத்தை ரூ. 10,000 ஐ அளிப்பதை அறிவித்துள்ளது, இது அவர்களுக்கு ப்ரீ-பெய்ட் Rupay கார்டில் வழங்கப்படும்.

கார்டு வழங்குவதற்கான கட்டணங்கள் அரசாங்கத்தால் ஏற்கப்படும். ஊழியர்களால் பெறப்பட்ட பணத்தை ரொக்கமாக திரும்பப் பெற முடியாது. அதை டிஜிட்டல் வழிகளைப் பயன்படுத்தி செலவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: November 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading