6,000 ஆண்டுகள் பழமையான கல்லறை புதைகுழியில் இருந்து கண்டறியப்பட்ட கற்கால மனிதர்களின் எலும்புக்கூடுகள்!

புதைகுழியில் இருந்து கண்டறியப்பட்ட கற்கால மனிதர்களின் எலும்புக்கூடுகள்

அகழ்வாராய்ச்சி நடைபெற்ற பகுதியில் பின்பற்றப்பட்டு வரும் விவசாய நடைமுறைகள் நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் வரலாற்றுச் சான்றுகளை சேதப்படுத்தவில்லை என்பதையும் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் மிகவும் மகிழ்ந்தனர்.

  • Share this:
சமீபத்தில் ருமேனியாவின் டிரான்சில்வேனியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சுமார் 6,000 ஆண்டுகள் பழமையான கல்லறை புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் டிரான்சில்வேனியாவில் ஒரு கட்டுமான இடத்தில் இருந்த இந்த பழமையான புதைகுழியை கண்டறிந்தனர். இந்த அகழ்வாராய்ச்சியில் கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்களின் ஏராளமான எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தவிர கல்லறையில் எலும்புக்கூடுகளின் மண்டை ஓடுகளுக்கு அருகில் பல்வேறு மண்பாண்ட பாத்திரங்களும் கூட கண்டுபிடிக்கப்பட்டன.

மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு கோடுகளுடன் கண்டறியப்பட்ட மண் கலசங்கள் மற்றும் பாத்திரங்கள் இறந்தவர்கள், அவர்களது மறுமையில் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்த அகழ்வாராய்ச்சி திட்டம் 10,000 சதுர மீட்டர் பெரிய வரலாற்று தளத்தில் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. Cluj-Napoca-வில் உள்ள Iclod என்ற கம்யூனில் ஒரு தொழில்துறை கட்டுமானம் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அகழ்வாராய்ச்சியாளர்கள் மேலே நாம் பார்த்த கற்கால தடயங்களுடன், செல்டிக் காலத்திலிருந்து ஒரு கூடுதல் ஆதாரத்தையும் கண்டுபிடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது 2200 ஆண்டுகள் பழமையானது. கற்கால மனிதர்களால் உணவை சேமிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு பெரிய குழி தான் அந்த கூடுதல் கண்டுபிடிப்பு. எனினும் இது இறுதியில் வீடுகளுக்கான ஒரு குப்பை குழியாக மாறியது, அந்த மிக பெரிய குழியில் பயனற்ற பொருட்கள் தூக்கி எறியப்பட்டன. இந்த மிக பெரிய கற்கால குழியிலிருந்து தற்போது ஒரு கால்நடை மண்டை ஓடு மற்றும் பீங்கான் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை வெளியே எடுக்கப்பட்டு உள்ளன.

டிரான்சில்வேனியாவின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் தொல்பொருள் ஆய்வாளராக இருக்கும் பவுல் புபேசா (Paul Pupeza) இது பற்றி கூறுகையில், "இந்த அகழ்வாராய்ச்சிகள் மிக முக்கியமானவை. அவற்றின் (கற்கால மற்றும் செல்டிக் நாகரிகம்) கதை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருந்தாலும் நிச்சயம் தெரிந்து கொள்ளப்பட வேண்டும். ஏனென்றால் அவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதன் மூலம், நம்மைப் பற்றி மேலும் நாம் தெரிந்து கொள்ளலாம். கடந்த காலத்தை பார்க்கவும், தனித்துவமான மற்றும் சிறப்பான ஒன்றை பார்க்கவும் நாம் பாக்கியம் செய்துள்ளோம்"என்று கூறினார்.

Also read... ’மரண பயம்’ டூரில் நேர்ந்த விபரீதம் - நூலிழையில் தப்பிய ஸ்காட்லாந்து தம்பதி!

மேலும் பேசிய பவுல் புபேசா, "எங்களது களப்பணி மிகவும் கடினமானது, நாங்கள் வெயில், மழை, தூசி உள்ளிட்ட சூழல்களை பொருட்படுத்தாமல் வேலை செய்கிறோம் மற்றும் முடிவுகள் எப்போதும் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்காது. ஆனால் தற்போது கண்டறியப்பட்ட பொருட்கள் மூலம் இந்த கடந்த காலத்தை எடுத்து விசேஷமான ஒன்றை மக்களுக்கு வெளிப்படுத்த முடிகிறது என்பதில் மகிழ்ச்சி" என்றார்.

இதனிடையே அகழ்வாராய்ச்சி நடைபெற்ற பகுதியில் பின்பற்றப்பட்டு வரும் விவசாய நடைமுறைகள் நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் வரலாற்றுச் சான்றுகளை சேதப்படுத்தவில்லை என்பதையும் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் மிகவும் மகிழ்ந்தனர். கல்லறை புதைகுழியில் காணப்படும் பொருள்கள் மற்றும் எலும்புகள் மீண்டும் ஆய்வுக்காக அருங்காட்சியகத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளன. விரிவான ஆய்வு முடிந்தவுடன் அவை பாதுகாப்பாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: