இந்த உலகில் பல வகையான உயிரினங்கள் உள்ளன. மிக சாதுவான உயிர்கள் முதல் மிக கொடூரமான உயிர்கள் வரை இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றன. இவற்றில் சில உயிரினங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், அடர்த்தியான காடுகள், ஆழமான கடல் பகுதிகளில் வாழ கூடிய உயிரினங்களை பற்றி நாம் பெரிதாக கேள்விப்பட்டு இருக்க மாட்டோம். இந்த பகுதிகளில் வாழும் உயிரினங்கள் நாம் நினைப்பதை விடவும் மிக பயங்கரமானதாக இருக்க கூடும். இவற்றின் உருவம் சிறியதாக இருந்தாலும், இவை உருவாக்கும் பாதிப்புகள் அதிக வீரியத்தை கொண்டிருக்கும்.
இப்படிப்பட்ட ஒரு பயங்கர உயிரினத்தை பற்றி தான் நாம் இன்று பார்க்க போகிறோம். இது ராஜ நாகத்தை விடவும் கொடிய உயிரினம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கொடிய உயிரினம் நத்தை இனத்தை சேர்ந்தது. ஒவ்வொரு உயிரினமும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், மற்றவர்களை வேட்டையாடவும் அதற்கான வழிகளை பின்பற்றுகின்றன. அதே போன்று உணவு சங்கிலியின் படி, ஒரு உயிரினம் மற்றொன்றுக்கு உணவாகும் இயல்பை கொண்டுள்ளது. ஆனால் இப்போது நாம் தெரிந்துகொள்ள போகிற உயிரினம் மிக ஆபத்தானதும், நச்சு தன்மையும் கொண்ட உயிரினமாகக் கருதப்படுகிறது.
இந்த உயிரினம் ஆபத்தானதாகக் கருதப்படுவதற்கு பல அறிவியல் காரணங்கள் உள்ளன. ஹவ் ஸ்டஃப் ஒர்க்ஸ் இணைய தளத்தின் அறிக்கையின்படி, இந்த விலங்கு ஆபத்தானதா என்பதை தீர்மானிக்க பல அளவுகோள்கள் உள்ளன. ஒன்று அவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை, அல்லது அவை நோய்களை அதிகம் பரப்பும் தன்மை கொண்டவை என்பதே இதற்கான கூறுகள்.
தொல்லியல் ஆய்வாளர்களை பிரமிக்க வைத்த 3000-ம் ஆண்டு பழமையான கோவில்
அந்த வகையில் ராஜ நாகம் மிகவும் விஷமானது என்று பலர் கருதினாலும், அதை விட தேள் தான் விஷயத்தன்மை அதிகம் கொண்டது என்று நம்புகிறார்கள். அதே போன்று தவளை இனம் விஷத்தன்மை கொண்டதா அல்லது ஜெல்லிமீன் அதிக விஷத்தன்மை கொண்டதா என்கிற விவாதமும் நடந்து வருகிறது. இருப்பினும், இவற்றை தாண்டி உலகில் மிகவும் விஷமான உயிரினம் புவியியல் உள்ளது. அது தான் கூம்பு நத்தை ஆகும், இதை கோனஸ் ஜியோகிராபஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த சிறிய சிப்பி இன உயிரினம் வெப்பமண்டல இந்தோ-பசிபிக் பாறைகளில் வாழ்கிறது. இது சிறிய மீன்களை வேட்டையாடி உயிர் வாழ்கிறது. அனைத்து கூம்பு நத்தைகளும் தங்கள் இரையை விஷத்தைப் பயன்படுத்தி வேட்டையாடி கொன்றாலும், இவற்றின் விஷம் மனிதர்களையும் கொல்லும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு பெரிய தேள் தன் இரையைக் கொல்லத் தேவைப்படும் விஷத்தில் பத்தில் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்தி இந்த நத்தை தன் இரையைக் கொன்றுவிடுகிறது.
இதுவரை, இந்த நத்தைகளால் குறைந்தது முப்பது டைவர்ஸ் (கடலில் நீத்துவோர்) இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இதன் விஷத்தால் பாதிக்கப்ட்டவர்களை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றால், உயிரே போய்விடுமாம். இந்த நத்தை கடித்தால் 65 சதவீதம் பேர் இறக்கின்றனர் என்று இந்த அறிக்கைகள் கூறுகின்றன. மேலும், இதன் விஷத்தை உடனடியாக அகற்றவோ கட்டுப்படுத்தவோ மருந்து எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.