ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பள்ளத்தை நோக்கி ஓடும் தண்ணீருக்கு குழி தோண்டி வழிவிடும் நாய்...இணையவாசிகளைக் கவர்ந்த செயல்

பள்ளத்தை நோக்கி ஓடும் தண்ணீருக்கு குழி தோண்டி வழிவிடும் நாய்...இணையவாசிகளைக் கவர்ந்த செயல்

தண்ணீருக்கு குழி தோண்டி வழிவிடும் நாய்

தண்ணீருக்கு குழி தோண்டி வழிவிடும் நாய்

நாய் ஒன்று பள்ளத்தை நோக்கி வரும் தண்ணீருக்கு வழிவிடும் செயல் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது. இவ்வகை நாய்கள் ஆஸ்திரேலியாவின் மேய்ச்சல் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அதிகமாக வளர்க்கிறார்கள். மனிதர்களிடம் பழகுவதில் சிறப்பான இடத்தில் இருப்பதால் இவ்வகை நாய்களை அங்கு அதிகமாக வளர்க்கப்படுகின்றன.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பள்ளத்தை நோக்கி வரும் தண்ணீரை நாய் ஒன்று அதன் போக்கில் செல்ல வழி அமைத்து கொடுத்த செயல் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

  பிரபல வானியற்பியலாளரான நீல் டி கிராஸ் டைசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இயற்பியலை விரும்பும் ஒரு நாயா? என வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஆஸ்திரேலியாவில் மேய்ச்சலுக்கு பயன்படுத்தும் நாய் ஒன்று நிலத்தில் பள்ளத்தை நோக்கி வரும் தண்ணீருக்கு குழி தோண்டி கொடுக்கின்றது.

  இந்த வீடியோ பலரது கவனத்தையும் பெற்று வைரலாகி வருகின்றது. ஆஸ்திரேலிய மேய்ச்சல் நாய் என அழைக்கப்படும் இவ்வகை நாய்கள் ஆடுகளை மற்ற விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவும், ஆடுகள் அதன் மந்தையைவிட்டுத் தவறிவிடாமல் இருக்கவும் இவ்வகை நாய்கள் மேய்ப்பு நாய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.


  இவை ஆஸ்திரேலியாவின் மேய்ச்சல் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அதிகமாக வளர்க்கிறார்கள். மனிதர்களிடம் பழகுவதில் சிறப்பான இடத்தில் இருப்பதால் இவ்வகை நாய்களை அங்கு அதிகமாக வளர்க்கப்படுகின்றன.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Trending, Viral