டி.வி நிகழ்ச்சியில் போட்டியாளர் கொடுத்த திடீர் முத்தம்.. அதிர்ச்சியில் உறைந்த பிரபல பாடகி...! - வீடியோ

டி.வி நிகழ்ச்சியில் போட்டியாளர் கொடுத்த திடீர் முத்தம்.. அதிர்ச்சியில் உறைந்த பிரபல பாடகி...! - வீடியோ
முத்தம் கொடுத்த போட்டியாளர்
  • News18
  • Last Updated: October 19, 2019, 3:58 PM IST
  • Share this:
டிவியில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போட்டியாளர் ஒருவர், நடுவராக இருந்த பாடகி நேஹா காக்கருக்கு திடீரென முத்தம் கொடுக்க அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

பாலிவுட் தொலைக்காட்சி ஒன்றில் இந்தியன் ஐடோல் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகிறது. இதன் 11-வது சீசன் போட்டிக்காக பாடகர்கள் தேர்வு நடந்து வருகிறது. பிரபல பாடகி நேஹா காக்கர் உள்ளிட்ட 3 பாடகர்கள் நடுவர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

டிவி வெளியிட்டுள்ள நிகழ்ச்சி ப்ரமோ வீடியோ ஒன்று தற்போது பாலிவுட் டிவி உலகில் வைரலாகிவருகிறது. போட்டியில் பங்கேற்ற ஒருவர் பாட்டு பாடி முடிந்ததும், பாடகி நேஹாவை மேடைக்கு அழைக்க, அவரும் சென்றார். அப்போது, போட்டியாளர் அவருக்கு சில பரிசுகளை கொடுத்தார்.


யாரும் எதிர்பாராத நேரத்தில் பாடகிக்கு அந்த போட்டியாளர் திடீரென கண்ணத்தில் முத்தம் கொடுக்க அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

Also See...

First published: October 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading