பொதுவாக பணம் எடுக்க ஏடிஎம் இயந்திரங்களை பார்த்திருப்போம். உணவுக்கான ஏடிஎம் தெரியுமா உங்களுக்கு? சமீபத்தில் தோசையை பிரிண்ட் செய்யும் இயந்திரத்தை ஒரு சென்னை நிறுவனம் உருவாக்கியது கேட்டிருப்பீர்கள். இவற்றை மிஞ்சும் ஒரு இட்லி ஏடிஎம் இப்போது வந்துள்ளது.
பெங்களூரில் 'இட்லி ஏடிஎம்' இன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரை ஈர்க்கும் வகையில், இந்த வாகன இட்லி தயாரிக்கும் இயந்திரம் சட்னி மற்றும் பொடியுடன் வெறும் 12 நிமிடங்களில் 72 இட்லிகள் வரை விநியோகிக்க கூடியதாக உள்ளது.
தென்னிந்திய காலை உணவான இட்லி ஏடிஎம் இயந்திரத்தில் ஆர்டர் செய்யும் செயல்முறை, விற்பனை இயந்திரத்தைப் பயன்படுத்துவதைப் போலவே உள்ளது. ஆர்டரைச் செய்ய மற்றும் பணம் செலுத்த அங்குள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். ஆர்டர் செய்யப்பட்டவுடன், ஆர்டர் செய்த நபர் தனது மொபைல் சாதனத்தில் ஒரு குறியீட்டைப் பெறுவார்.
Idli ATM in Bangalore... pic.twitter.com/NvI7GuZP6Y
— B Padmanaban (padmanaban@fortuneinvestment.in) (@padhucfp) October 13, 2022
அந்த குறியீட்டை இயந்திரத்தில் காட்டினால், அது ஸ்கேன் செய்து, இயந்திரம் சில நிமிடங்களில் ஆர்டரை பேக் செய்து வழங்கும். இந்த இட்லி தயாரிக்கும் இயந்திரம் ஒரு Freshot Foodbots எனும் ஸ்டார்ட்-அப் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
கணினி பொறியாளரான ஹிரேமத், 2016 ஆம் ஆண்டு தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, இரவு நேரத்தில் அவரால் சூடான இட்லிகளை தயாரிக்க முடியவில்லை. அதற்காக இதுபோன்ற உணவை தயாரிக்க ஒரு தானியங்கி இயந்திரத்தை உருவாக்க நினைத்தேன். அது தான் இப்பொது வடிவேல் பெற்று செயல்பட்டு வருகிறது என்றார்.
இது இப்போது 24 மணிநேரமும் வேலை செய்கிறது. இட்லி-போட் தென்னிந்திய காலை உணவுக்கான முதல் முழு தானியங்கு சமையல் மற்றும் விநியோக இயந்திரம் என்று கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.