ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

குழந்தையை கவனிக்கணும்.. 3 மாதங்களுக்கு நோ ஷூட்டிங்.. நயனின் பக்கா முடிவு!

குழந்தையை கவனிக்கணும்.. 3 மாதங்களுக்கு நோ ஷூட்டிங்.. நயனின் பக்கா முடிவு!

இரட்டை குழந்தைகளுடன் விக்கி - நயன்தாரா

இரட்டை குழந்தைகளுடன் விக்கி - நயன்தாரா

திருமணத்திற்கு முன்பே வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவெடுத்த விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் திரையின் நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைக்கு பெற்றோராகி உள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கான திருமணம் சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அந்த திருமண விழாவிற்கு ரஜினிகாந்த்,  ஷாருக்கான் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நேரில் சென்று வாழ்த்தினர்.

திருமணத்திற்கு பின்பு இருவரும் தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றனர்.  அதன்பின் சென்னை திரும்பிய அவர்கள் தங்களுடைய திரைப்படப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தனர். குறிப்பாக நயன்தாரா ஜாவான் திரைப்படத்தில் நடித்து வந்தார். நடிகர் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்கும் படத்திற்கான கதை விவாத பணிகளில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தின் சென்னை படப்பிடிப்பு இரண்டு தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது.  அப்போது நயன்தாரா இன்னும் மூன்று மாதங்களுக்கு எந்த திரைப்படங்களிலும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அதற்கு என்ன காரணம் என புரியாமல் இருந்தது.  அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

விக்னேஷ் சிவன் -  நயன்தாரா ஆகியோர் வாடகை தாய் மூலமாக குழந்தை பெறுவது என முடிவெடுத்துள்ளனர். அதற்கு முறையான அனுமதி பெற்று அதற்கான நடைமுறையில் இறங்கியுள்ளனர்.  இவர்கள் இருவரின் கருமுட்டையை பயன்படுத்தி வாடகை தாய் மூலமாக குழந்தை கருவை உருவாக்கி இருக்கின்றனர். அதுவும் திருமணத்திற்கும் நான்கு மாதங்களுக்கு முன்பே அதற்கான நடைமுறைகள் வெற்றிகரமாக நடந்துள்ளன. இந்த செய்தி வெளியே தெரிய கூடாது என்பதில் மிக கவனமாக இருந்துள்ளனர். அதனால் அவர்களுக்கு நெருங்கிய ஒரிருவருக்கு மட்டுமே தெரியப்படுத்தியுள்ளனர்.  வாடகை தாய் வயிற்றில் குழந்தைகள் ஆரோக்கியமான வளர தொடங்கிய பிறகே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கண்கள் நீயே.. காற்றும் நீயே.! இரட்டைக் குழந்தைக்கு பெற்றோர் ஆன நயன் - விக்கி ஜோடி

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோருக்கு திருமணமாகி சரியாக நான்கு மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில் தற்போது இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதுவும் கரு வளர்ந்த 8 மாதத்தில் குழந்தைகள் பிறந்துள்ளன என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தங்களுக்கு குழந்தை பிறந்த தகவலை விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  மேலும் இந்த குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் எனவும் திட்டமிட்டு ஒருவாரத்திற்கும் மேலாக ஆய்வு செய்துள்ளனர். ஆனால் இறுதியாக  குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என நட்சத்திர ஜோடி வித்தியாசமான முறையில் பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.

இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதால் அவர்களை கவனித்துகொள்ள நயன்தாரா திட்டமிட்டுள்ளார். அதன் காரணமாக அவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த படங்களிலும் நடிக்க மாட்டார்.

பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது வழக்கம். ஆனால் தமிழ் திரையில் இது போன்று நடைபெற்றது இல்லை. இந்த நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற்றுள்ளனர். இவர்களுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Published by:Lakshmanan G
First published: