ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சாலைகளில் கவனம்.. விபத்தைத் தடுக்க கண்டிப்பாக ஃபாலோ செய்யவேண்டிய சில விஷயங்கள்!

சாலைகளில் கவனம்.. விபத்தைத் தடுக்க கண்டிப்பாக ஃபாலோ செய்யவேண்டிய சில விஷயங்கள்!

தேசிய சாலை பாதுகாப்பு வாரம்

தேசிய சாலை பாதுகாப்பு வாரம்

மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 - ஜனவரி 17 வரை கொண்டாடப்படுகிறது. சமீப ஆண்டுகளாக மிகவும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கு மத்தியில், அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் என்பதை நோக்கமாக கொண்டு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது.

1989-ஆம் ஆண்டு முதல் முறையாக தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது. மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் சுமார் 4,67,171 சாலை விபத்துகள் நடந்துள்ளன.

காரணங்கள்:

அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் சாலைகளில் அதிவேகமாக செல்வது, வாகனங்களுக்கு இடையில் முறையான தொலைவு இடைவெளி இல்லாமல் செல்வது மற்றும் டிரைவிங்கின் போது உடல்நல கோளாறுகளால் ஏற்படும் அசவுகரியம் அல்லது கவனக்குறைவு, போதையில் வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவது, சோர்வு உள்ளிட்டவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. வாகன ஓட்டிகள் எதிர் பாதையில் நுழையும் போது, கார் சிக்னல்களை சரியாக பயன்படுத்தாமல் அல்லது வேறு வாகனத்தை முந்தி செல்ல முயற்சிக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் சாலை நிலைமைகளும் விபத்துக்களுக்கு காரணமாகின்றன.

Also Read : 15 விநாடி டைம் : யானைக்குள் மறைந்திருக்கும் விலங்கள் எத்தனை? - உங்கள் திறமைக்கு சவால்!

நம் நாட்டில் பின்பற்ற வேண்டிய முக்கிய சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள்:

பைக் அல்லது கார் உள்ளிட்ட எந்த வாகனம் ஓட்டும் போதும், நடக்கும் போதும் கூட சாலையின் இடதுபுறமாகவே செல்ல வேண்டும். சாலையின் வலதுபுறத்தில் இருந்து வரும் வாகனங்களால் விபத்து ஏற்படாமல் தவிர்க்க எப்போதும் இந்த விதியை பின்பற்ற வேண்டும்.வாகனத்தை திருப்பும் போதும் இந்த விதியை கடைபிடிக்க வேண்டும்
கிராசிங்ஸ், ரோட் இன்டர்செக்ஷன்ஸ் மற்றும் கார்னர்களில் வாகனத்தை பயன்படுத்தும் போது ஸ்பீடை குறைத்து பாதையை பாதுகாப்பாக பயன்படுத்தும் வரை காத்திருக்க வேண்டும். மெயின் ரோட்களில் நுழையும் போதும் இதையே பின்பற்றவும்.
தேவைப்படும் போதும், எந்த திசையை நோக்கி வாகனத்தை திருப்பும் போதும் மெதுவாக செல்வதோடு உரிய கார் சிக்னல்கள் மற்றும் கை சைகைகளை பயன்படுத்த வேண்டும். வாகனத்தை திருப்பும் போது சாலைகளில் அருகே வந்து கொண்டிருக்கும் வாகனங்கள் கடந்து சென்ற பிறகு, தூரத்தில் வாகனங்கள் வருவதை உறுதி செய்து கொள்ளுங்கள். silence zone-ல் ஹாரன்களை பயன்படுத்த வேண்டாம்.
டூவீலர்களில் செல்பவர்கள் எப்போதும் ISI தரச்சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டை அணிவது அவசியம். காரில் செல்லும் போது டிரைவர் மட்டும்மல்ல முன்னால் மற்றும் பின்னால் அமரும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் போட்டு கொள்வது அவசியம்.
ஆல்கஹால் நிதானத்தை இழக்க செய்கிறது மற்றும் விபத்து அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.
வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனை பயன்படுத்துவது அலல்து பேசுவது விபத்துக்கான வாய்ப்பை  அதிகரிக்கிறது. எனவே டிரைவிங்கின் போது முழுக்கவனமும் சாலையில் மட்டுமே இருக்க வேண்டும்.
வெள்ளை மற்றும் கருப்பு கலர்களில் சாலைகளில் போடப்பட்டுள்ள ஜீப்ரா கிராசிங்ஸ் பாதசாரிகள் சாலையை கடக்கவோ அல்லது கடக்கக் காத்திருக்கவோ இருக்கலாம் என்று வாகன ஓட்டிகளை எச்சரிக்கிறது. எனவே ஜீப்ரா கிராசிங்ஸை பார்க்கும் போது வாகனத்தின் வேகத்தை குறைத்து பாதசாரிகள் இருந்தால் அவர்களுக்கு வழிவிடவும்.
உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது அல்லது சோர்வாக இருக்கும் போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும். சாலைகளில் செல்லும் போது ட்ராஃபிக் சிக்னல் லைட்ஸ்களை புறக்கணிக்காதீர்கள். சிக்னல் பச்சை நிறத்தில் இருக்கும் போது மட்டும் நடக்கவும் அல்லது வாகனம் ஓட்டவும். சிவப்பு நிறத்தில் இருந்தால் வாகனத்தை நிறுத்தவும்.
கால்நடைகள், நாய்கள், பூனைகள் சாலைகளில் சுதந்திரமாக சுற்றி திரிவதால் கவனமாக வாகனம் ஓட்டுவது அவை விபத்தில் சிக்குவதை தவிர்க்கும்.
First published:

Tags: Road Safety, Traffic Rules