Home /News /trend /

ஜூலை 22: தித்திக்கும் தேசிய மாம்பழ தினம் இன்று.! - மாம்பழத்தின் வரலாறு தெரியுமா?

ஜூலை 22: தித்திக்கும் தேசிய மாம்பழ தினம் இன்று.! - மாம்பழத்தின் வரலாறு தெரியுமா?

மாம்பழ தினம்.

மாம்பழ தினம்.

மாம்பழம் என்பது வயது வித்தியாசமின்றி அனைவரும் விரும்பும் பழங்களில் ஒன்றாகும். அதே போல் இந்திய வரலாற்றின் ஒருங்கிணைந்த ஒன்றாகும்

மாம்பழம் என்பது வயது வித்தியாசமின்றி அனைவரும் விரும்பும் பழங்களில் ஒன்றாகும். அதே போல் இந்திய வரலாற்றின் ஒருங்கிணைந்த ஒன்றாகும். மாம்பழத்திற்காக ஒரு தேசிய தினம் ஜூலை 22 அன்று ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அந்த நாளின் முக்கியத்துவம் மற்றும் வரலாற்றைக் காணலாம்.

மாம்பழங்களின் வரலாறு நீண்ட காலத்திற்கு முந்தையது. சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பயிரிடப்பட்டது. இந்தியாவில் இருந்து, மாம்பழ விதைகள் ஆசியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகள் , கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா வரை 300-400 AD இல் பரவி பின்னர் உலகின் பிற பகுதிகளுக்கு பயணித்தன. 'இந்தியாவில் பழங்களின் ராஜா' என்றும் மாம்பழம் அழைக்கப்படுகிறது.

இந்த பழம் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் ",மாங்கோ " என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பெயர் மலாயா வார்த்தையான "மன்னா" என்பதிலிருந்து பெறப்பட்டது. போர்த்துகீசியர்கள் 1490 களில் மசாலா வர்த்தகத்திற்காக கேரளாவிற்கு வந்தபோது "மாங்கா" என்று மாற்றினர்.

அண்டார்டிகாவில் வழக்கத்திற்கு மாறாக திடீரென பிங்க் நிறமாக மாறிய வானம்

மாம்பழக் கதைகள்:

புத்தர் மாமரத்தடியில் இளைப்பாறியதாக பக்திக் கதைகளும்  முகலாய பேரரசர் பாபர், சுவையான இந்திய மாம்பழத்தை ருசித்த பிறகுதான் இந்தியாவைக் கைப்பற்ற முடிவு செய்தார் என்ற கதைகளும் உண்டு. முகலாயப் பேரரசுதான் 'சௌன்சா,' 'அன்வர் ரடோல்,' மற்றும் 'கேசர்' போன்ற பல புகழ்பெற்ற மாம்பழங்களை உருவாக்கி வளர்த்தது. பேரரசர்களில் ஒருவரான ஷாஜஹான் ஜாபர், அரண்மனையில் மாம்பழங்களை வளர்த்து விரும்பி உண்டார். தமிழகத்தில் காரைக்கால் அம்மையாருக்கு இறைவன் மாம்பழங்களைக் கொடுகாத்தாக நம்பப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழாவும் நடத்தப்படுகிறது.

மாம்பழம் பற்றிய செய்திகள்:

  • முந்திரி மற்றும் பிஸ்தாவுடன் மாம்பழங்களுக்கு தொடர்பு உண்டு. அவை அனைத்தும் அனகார்டியாசி குடும்பத்தைச் சேர்ந்தவை.

  • மரம் 150 அடி உயரம் வரை வளரக்கூடியது மற்றும் மிக நீண்ட ஆயுட்காலம் கொண்டது.

  • இளமையாக இருக்கும் போது, ​​மாம்பழத்தில் ஆரஞ்சு-சிவப்பு இலைகள் இருக்கும், அவை காலப்போக்கில் அடர் சிவப்பு நிறமாக மாறும்.

  • மரத்தின் பூக்களிலிருந்து வளரும் மாம்பழங்கள், முழுமையாக பழுக்க நான்கு முதல் ஐந்து மாதங்கள் ஆகலாம்.

  • உலகில் 500 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன, அவற்றில் பல அரசியல், மத மற்றும் சமூக சம்பவங்களால் வளர்ச்சியடைந்தன.

  • மாம்பழம் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் தேசிய பழமாகவும், பங்களாதேஷின் தேசிய மரமாகவும் கருதப்படுகின்றன.

  • ஒரு கூடை மாம்பழ சின்னம் இப்பகுதியில் நட்பின் அடையாளமாக கருதப்படுகிறது.

  • உலகின் மாம்பழ விநியோகத்தில் கிட்டத்தட்ட பாதி இந்தியாவில் அறுவடை செய்யப்படுகிறது. இரண்டாவது பெரிய ஆதாரம் சீனா.


1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் டெல்லியில் சர்வதேச மாம்பழத் திருவிழா நடத்தப்படுகிறது. மாம்பழத்தின் பல்வேறு அம்சங்களில் போட்டிகள் மற்றும் வினாடி வினாக்கள் நடத்தப்படுகின்றன. இந்திய மாம்பழ வகைகளை பற்றி மக்கள் அறிந்துகொள்ளவும் அதை பாதுகாக்க வைக்கும் எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் நூறுக்கும் மேற்பட்ட மா வகைகள் உள்ளன.

இதை பல்வேறு வழிகளில் ருசிக்கலாம், உதாரணமாக ஐஸ்கிரீம்கள், மியூஸ், ஸ்மூத்திகள், கேக்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Fruits, Mango, Mango Seeds

அடுத்த செய்தி