பனியால் மூடிய இமயமலையின் அற்புதக் காட்சி - வைரலாகும் நாசாவின் புகைப்படம்

பனியால் மூடிய இமயமலையின் அற்புதக் காட்சி - வைரலாகும் நாசாவின் புகைப்படம்

படம்: நாசா/இன்ஸ்டாகிராம்.

நாசா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தில், இமயமலை பனியால் போர்த்தப்பட்டது போன்று காட்சியளித்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • Share this:
மனிதன் இதுவரை கண்டிராத புகைப்படங்களை இப்போதுள்ள தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டு வருகிறான். அந்த வகையில், நாசா விண்வெளி ஆய்வு மையம் பனியால் மூடப்பட்ட இமயமலை மற்றும் புது டெல்லியின் பிரகாசமான நகர விளக்குகள் ஆகியவற்றின் படத்தைப் பகிர்ந்துகொண்டது. இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தையே ஒரு கலக்கு கலக்கிவருகின்றன.

இந்த அட்டகாசமான படங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) உறுப்பினரால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாசா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தப் படத்தை ஒரு நீண்ட குறிப்போடு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிக உயர்ந்த மலைத்தொடரான இமயமலை இந்திய-யூரேசிய டெக்டோனிக் பிளேட்களுக்கு (Indian and Eurasian tectonic plates) இடையில் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மோதியதன் விளைவால் உருவானதாக நாசா அந்தக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தப் படத்தில் வட இந்தியாவுடன் பாகிஸ்தானின் வளமான விவசாயப் பகுதி மற்றும் திபெத்திய பீடபூமி போன்றவை உள்ளதாகவும், உலகின் கூரை வடக்கில் தெரியும் என்றும் படத்தில் குறிப்பிட்டுள்ளது. 
View this post on Instagram

 

A post shared by NASA (@nasa)


இந்தப் படம் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. படம் இணையத்தில் வெளியானதிலிருந்து, சுமார் 1,114,270 லைக்குகளையும் லட்சத்திற்கும் மேற்பட்ட கமெண்டுகளையும் பெற்றுள்ளது. பின்னூட்டத்தில் ஒருவர், “மிகவும் அற்புதமான, ஆச்சரியமான ஒரு படம்" என்று கருத்து தெரிவித்தார். இதற்கு மற்றொரு பயனர், "இதைப் பார்ப்பதற்கு அட்டகாசமாக உள்ளது, இவ்வளவு பிரகாசத்துடனா நகரங்கள் உள்ளன?" என்றும், சிலர் "இந்தப் புகைப்படத்தில் இந்தியா, பாகிஸ்தானின் எல்லைகளை நம்மால் காண முடிகிறது" என்றும் கூறினர். 
View this post on Instagram

 

A post shared by NASA (@nasa)


இந்தப் படம் அனைவரையும் திகைக்க வைத்தது. பலர் ஹார்ட் ஈமோஜியை பின்னூட்டமிட்டு தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர். ஒரு பயனர் கருத்து பதிகையில், “இவை நமக்குத் தெரிந்த வண்ணங்கள்தாம். என்றாலும், இப்போது காண இவை மிகவும் அழகாக இருக்கின்றன.” என்றார்.

நாசா இதுபோன்ற அட்டகாசமான, பலரும் வியக்கும் படங்களை அடிக்கடி இணையத்தில் வெளியிடுகிறது. அவை நிறுவனத்தின் உயர் தெளிவுத்திறன் கொண்ட தொலைநோக்கிகள் (high-resolution telescopes) அல்லது ISS-ன் குழுவினால் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: