ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஹாலோவீன் அன்று கொடூரமாக சிரிக்கும் சூரியனின் படத்தை வெளியிட்ட நாசா!

ஹாலோவீன் அன்று கொடூரமாக சிரிக்கும் சூரியனின் படத்தை வெளியிட்ட நாசா!

நாசா

நாசா

2010 ஆம் ஆண்டு முதல் SDO சூரியனைக் கண் இமைக்காமல் கவனித்துக்கொண்டு இருக்கிறது. சூரிய வெடிப்பு, சூரிய புயல், கொரோனல் லூப்கள் போன்ற நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai |

  ஹாலோவீன் திருவிழாவின்போது பேய், பிசாசு, ரத்தக்காட்டேரி என்று அமானுஷ்யம், மர்மம் சார்ந்த வேடங்கள் போட்டு  கொண்டாடுவது வழக்கம். தங்கள் கலை நயத்தால் கிடைக்கும் பொருட்களில் எல்லாம் கொடூர மர்ம சிரிப்பு வரும் உருவங்களை உருவாக்குவர்.

  அந்த வரிசையில் ஹாலோவீன் அன்று,   சூரியன் கொடூரமான சிரிப்பது போன்ற ஒரு சோலார் ஜாக்-ஓ-லாந்தரின் படத்தை அமெரிக்காவின் நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.

  சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி (SDO) அக்டோபர் 2014 இல் சூரியனை படம் பிடித்தது. அதில் சூரியனின் வளிமண்டலமான கொரோனாவில் வட்டமிடும் காந்தப்புலங்களின் தீவிரமான காந்த புயல் வெளிப்படும் காட்சி படமாக்கப்பட்டிருந்தது. அதில் உள்ள ஒளி உமிழும் பகுதியை மட்டும் வெளிப்படுத்துமாறு மாற்றும்போது சூரியன் கொடூரமாக சிரிப்பது போல் காட்சி அளிக்கிறது.

  நாசாவின் 60 ஆண்டுகள் பழைய ஆய்வகக் கட்டிடம் இடித்து தரைமட்டம்... காரணம் என்ன?

  தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன், எனப்படும் நாசா தனது இன்ஸ்டாகிராமில், படத்தில் சூரியனிடம் உள்ள ஆக்டிவ் பகுதிகள் அதிக ஒளி மற்றும் ஆற்றலை வெளியிடுவதால் இப்படி தோன்றுகிறது என்று விளக்கமளித்துள்ளது.

  “பொதுவாக தங்கம் மற்றும் மஞ்சள் நிறத்தில் வண்ணமயமாக தெரியும் சூரியனை 171 மற்றும் 193 ஆங்ஸ்ட்ரோம்களில் இரண்டு செட் தீவிர புற ஊதா அலைநீளங்கள் ஒன்றிணைக்கப்பட்ட வடுகட்டிகள் கொண்டு மாற்றியதால் இந்தப் படம் ஹாலோவீன் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது" என்று நாசா ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
   
  View this post on Instagram

   

  A post shared by NASA (@nasa)  NASA, "2010 ஆம் ஆண்டு முதல் SDO சூரியனைக் கண் இமைக்காமல் கவனித்துக்கொண்டு இருக்கிறது. சூரிய வெடிப்பு, சூரிய புயல், கொரோனல் லூப்கள் போன்ற நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது. இது சூரியனின் உட்புறம், வளிமண்டலம், காந்தப்புலம் மற்றும் ஆற்றல் வெளியீட்டை அளவிட்டு வருகிறது. " என்று குறிப்பிட்டுள்ளது.

  இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது. கருத்துப் பிரிவில், சில இணைய பயனர்கள் படம் ஹாலோவீன் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது என்று சுட்டிக்காட்டினர்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Halloween, NASA