சமீப காலமாக சூரிய குடும்பத்தில் நிகழும் அதிசயங்களை படம்பிடித்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மக்களை ஆச்சர்யப்படுத்துவதில் நாசா ஈடுபட்டு வருகிறது. அதிலும், சில முக்கிய தினங்களின் போது நாசா அது தொடர்பான சில புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூன் 8ம் தேதி உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்பட்டது. அந்த தினத்தை அனுசரிக்கும் வகையில் நாசா நெபுலாவின் கண்கவர் புகைப்படம் ஒன்றை மனாட்டி என்ற கடற்பசுக்களோடு ஒப்பிட்டு வெளியிட்டுள்ளது. இந்த நெபுலா 700 ஒளி ஆண்டுகள் நீளமான சூப்பர்நோவா எச்சம் ஆகும். மேலும் இதற்கு W50 என்று பெயரிடப்பட்டுள்ளது.
புளோரிடா கடலில் வசிக்கும் கடற்பசுக்கள் மற்றும் நெபுலாவின் வினோதமான ஒற்றுமை காரணமாக அதற்கு அந்த பெயர் சூட்டப்பட்டதாக நாசா குறிப்பிட்டுள்ளது. நெபுலா என்பது விண்வெளியில் தூசி மற்றும் வாயு அடங்கிய ஒரு பெரிய மேகம் ஆகும். சில நெபுலாக்கள் ஒரு சூப்பர்நோவா போன்ற இறக்கும் நட்சத்திரத்தின் வெடிப்பால் வெளியேற்றப்படும் வாயு மற்றும் தூசியிலிருந்து வருகின்றன. மற்ற நெபுலாக்கள் புதிய நட்சத்திரங்கள் உருவாகத் தொடங்கும் பகுதிகளில் தோன்றும்.
இந்த நிலையில் W50 நோவா நீர்வாழ் உயிரினத்தின் உடலமைப்போடு பரவலாக ஒத்துப்போவதை நாசா பகிர்ந்துகொண்டுள்ளது. இந்த ஆபத்தான நீர்வாழ் பாலூட்டிகள் சுமார் 10 அடி நீளமுள்ளவை. அவை நாளின் பெரும்பகுதியை ஓய்வெடுக்கவே செலவிடுகின்றன. பெரும்பாலும் அதன் முதுகில் உள்ள ஃபிளிப்பர்களின் உதவியுடன் தங்கள் குண்டான உடலை நகர்த்தி செல்கின்றன.
https://www.instagram.com/p/CP3gJDLg1hj/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
முதன் முதலில் NRAO-ன் இயக்குனரும் நிர்வாக உதவியாளருமான ஹெய்டி வின்டர் மற்றும் NRAO ஊடக தயாரிப்பாளரான டானியா புர்ச்செல் ஆகியோர் தான் இந்த இரு உருவத்திற்கும் இடையேயான ஒற்றுமையை கவனித்தனர். இது உயிரியல் மற்றும் வானியல் ஆகிய இரு உலகங்களையும் இணைக்கும் ஒரு அற்புதமான காட்சி என அவர்கள் அதை விவரித்தனர்.
சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சூப்பர்நோவாவாக வெடித்து அதன் வாயுக்களை கொண்டு வெளிப்புறமாக குமிழி அல்லது மேகத்தை உருவாக்கி அனுப்பிய அக்விலா விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு மாபெரும் நட்சத்திரத்தின் எச்சம் தான் நெபுலா W50 ஆகும். இது கடற்ப்பசுவிற்கும் நெபுலாவிற்கும் பொதுவான வடிவமாக இருப்பதாக மட்டும் தெரியவில்லை. இதில் ஒற்றுமையைத் தாங்கும் பல பண்புக்கூறுகள் உள்ளன. W50 அம்சங்கள் துகள் கற்றைகளைச் சுற்றி ஒரு சுழல் வடிவத்தை உருவாக்குகின்றன. இது வடுக்கள் போல தோன்றுகிறது. இதேபோல், ஆழமற்ற நீரை விரும்பும் கடற்பசுக்களும் படகு ஓட்டுநர்களுடனான மோதல்களால் ஏற்படும் வடுக்கள் தாங்குகின்றன என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இருண்ட நீரில் கலக்கக்கூடிய ‘கடல் பசு’ போலவே, ஏறக்குறைய 18,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள வாயு மேகம் வானத்தில் கண்டுபிடிக்க கடினமாக இருந்தது என்றும் கூறியுள்ளனர். நாசா பகிரும் வான உடல்களின் மற்ற அதிர்ச்சியூட்டும் படங்களைப் போலவே, இந்த படமும் நெட்டிசன்களிடமிருந்து 23000-க்கும் மேற்பட்ட லைக்குகளுடன் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் பல ரீடீவீட்டுகளும், கமெண்ட்டுகளும் இந்த பதிவிற்கு குவிந்து வருகிறது. அந்த கமெண்ட் செக்க்ஷனில் சிலர் நெபுலா W50-ஐ ஒரு சங்கு ஓடுடன் சாப்பிட்டனர். மேலும் சிலர் அதனை ஸ்டாச்சு ஆப் லிபெர்ட்டியுடன் ஒப்பிட்டு பார்த்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.