• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 300 ஆண்டுகள் பழமையான சூப்பர்நோவா வெடிப்பின் மிச்சம் - கண்கவர் ஃபோட்டோவை ஷேர் செய்த நாசா!

300 ஆண்டுகள் பழமையான சூப்பர்நோவா வெடிப்பின் மிச்சம் - கண்கவர் ஃபோட்டோவை ஷேர் செய்த நாசா!

சூப்பர்நோவா வெடிப்பின் மிச்சம்

சூப்பர்நோவா வெடிப்பின் மிச்சம்

நாசா ஆய்வகங்கள் என்பவை பரந்த பிரபஞ்சத்திற்கான மனிதர்களின் கண்களாக செயல்பட்டு வருகின்றன.

  • Share this:
நாசா சமீபத்தில் சூரியனின் 10 வருட கால லேப்ஸ் வீடியோ, கருந்துளையின் புகைப்படம், அண்டார்டிகாவில் இருக்கும் ஒரு செவ்வக பனிப்பாறையின் புகைப்படம் உள்ளிட்டவற்றை ஷேர் செய்து நெட்டிசன்களை திகைக்க செய்தது. நாசா ஷேர் செய்த ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோ உலக மக்களை கவர்ந்தன. ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், விண்ணிலிருந்து டோக்கியோ நகரம் எப்படி ஜொலிக்கிறது என்பதை படம் பிடித்த நாசா அந்த வண்ணமிகு ஃபோட்டோவை ஷேர் செய்திருந்தது.

அந்த போட்டோ ஜப்பானின் டோக்கியோ மட்டும் வண்ண வண்ண விளக்குகளின் வெளிச்சத்தால் பளீரென்று மின்னுவதும், அதைச் சுற்றிய ஜப்பானின் மற்ற பகுதிகள் அவ்வளவு பிரகாசமாக இல்லாதிருப்பதையும் காட்டி நெட்டிசன்களை பிரம்மிக்க வைத்தது.
இந்நிலையில் விண்வெளி நிறுவனமான நாசா பூமியிலிருந்து 11,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான ஒரு நட்சத்திரத்தின் சூப்பர்நோவா வெடிப்பால் உருவான மிச்சமிருக்கும் உருவத்தை கண்முன் காட்டுவதன் மூலம் நெட்டிசன்களை மயக்கி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாசா ஆய்வகங்கள் என்பவை பரந்த பிரபஞ்சத்திற்கான மனிதர்களின் கண்களாக செயல்பட்டு வருகின்றன. பிரபஞ்சத்தில் தொலைதூரத்திலிருக்கும் கண்கவர் காட்சிகளை நம் முன் கொண்டு கண்களுக்கு விருந்தளிக்கின்றன. அந்த வகையில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சூப்பர்நோவாவின் போது ஏற்பட்ட வண்ணமயமான ஒளி சிதறல் கலவையின் எஞ்சியிருக்கும் உருவத்தை ஃபோட்டோ எடுத்து ஷேர் செய்து உள்ளது நாசா.

இது தொடர்பான ஃபோட்டோவை தனது அதிகாரபூர்வ இன்ஸ்டா பேஜில் ஷேர் செய்துள்ள நாசா அந்த ஃபோட்டோவை காலிடோஸ்கோப் ஆஃப் கலர் (a Kaleidoscope of color) என்று குறிப்பிட்டுள்ளது. இது பற்றி கூறி உள்ள மிகசிறந்த தொழில் நுட்ப உபகரணங்கள் மற்றும் வானியல் தொலைநோக்கிகளை உள்ளடக்கிய தங்களது சிறந்த 3 ஆய்வகங்களால் இந்த ஃபோட்டோ எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 
View this post on Instagram

 

A post shared by NASA (@nasa)


ஆனால் நாசா ஆய்வகங்கள் கடந்த 2003-04 இல் அதன் ஒளியைக் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான இன்ஸ்டா பதிவில் A kaleidoscope of color என்று கேப்ஷனிட்டு கண்கவர் ஃபோட்டோவை ஷேர் செய்துள்ள நாசா, ஒரு பெரிய நட்சத்திரத்தின் சூப்பர்நோவா வெடிப்பால் உருவாக்கப்பட்ட இந்த 300 ஆண்டுகள் பழமையான எஞ்சிய இந்த காசியோபியா ஏ (Cassiopeia A- Cas A), பூமியிலிருந்து சுமார் 11,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த ஃபோட்டோவில் உள்ள வெவ்வேறு நிறங்கள் ஒவ்வொரு ஆய்வகத்தால் வழங்கப்பட்ட விவரங்களை அடையாளம் காட்டுவதாகவும் நாசா கூறி உள்ளது. இது வானியலாளர்களுக்கு Cas A பற்றிய முழுமையான பார்வையை அளிக்கிறது. இதிலிருக்கும் சிவப்பு நிறம் ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியின் (Spitzer Space Telescope) அகச்சிவப்பு தரவு (Infrared data) இது "சுமார் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் வெளிப்புற ஷெல்லில் சூடான தூசியை காட்டுகிறது.

Also read... ஆதரவற்ற இந்து பெண்ணை வளர்த்து, வேத முறைப்படி இந்து மாப்பிள்ளைக்கே திருமணம் செய்து வைத்த இஸ்லாமியர்!

மஞ்சள் நிறமானது @NASAHubble-லிருந்து ஆப்டிகல் தரவு சுமார் 10,000 டிகிரி செல்சியஸ் வெப்ப வாயுக்களின் நுட்பமான இழை அமைப்பைக் காட்டுகிறது

பச்சை & நீலம்: இந்த இரண்டு நிறங்களும் சுமார் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்ப வாயுக்கள் இருப்பதற்கான @NASAChandraXray-வின் எக்ஸ்-ரே தரவுகளை காட்டுகின்றன. சூப்பர்நோவாவின் போது வெளியேற்றப்பட்ட பொருட்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 10 மில்லியன் மைல் வேகத்தில் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசி மீது மோதிய போது இந்த சூடான வாயு உருவானது.

இந்த ஒப்பீடு வானியல் ஆய்வாளர்களுக்கு சூப்பர்நோவா எச்சத்தில் இருக்கும் பெரும்பாலான தூசுகள் வெடிப்பதற்கு முன் மிகப்பெரிய நட்சத்திரத்திலிருந்து வந்ததா அல்லது வேகமாக விரிவடையும் சூப்பர்நோவா எஜெக்டாவிலிருந்து வந்ததா என்பதை நன்கு தீர்மானிக்க உதவும் என்றும் நாசா கூறி உள்ளது. இந்த ஃபோட்டோ கடந்த 2005-ம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டிருந்தாலும், தற்போது மீண்டும் நெட்டிசன்களை கவர்ந்திழுத்து வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: