பிரபஞ்சத்தின் அற்புதமான புகைப்படங்களை வெளியிட்ட நாசா: வைரலாகும் புகைப்படங்கள்!

பிரபஞ்சத்தின் அற்புதமான புகைப்படங்களை வெளியிட்ட நாசா

40வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக விண்வெளி உலகின் சில நம்பமுடியாத புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் இப்போது அற்புதமான பரிசு வழங்குநர்களின் பிரிவில் நாசா சேர்ந்துள்ளது என்று சொல்லலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக பரிசுகளை வழங்கும் நடைமுறை உலகெங்கிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த பரிசுகளில் சில முற்றிலும் நம்பமுடியாதவையாக இருக்கும். மேலும் சில மக்களைப் பிரமிக்க வைக்கும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தின் 40வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக விண்வெளி உலகின் சில நம்பமுடியாத புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் இப்போது அற்புதமான பரிசு வழங்குநர்களின் பிரிவில் நாசா சேர்ந்துள்ளது என்று சொல்லலாம். மேலும் இந்த புகைப்படங்கள் பிரபஞ்சத்தின் சில அருமையான காட்சிகளைக் காண்பிக்கின்றன. அவற்றின் அற்புதமான புகைப்படங்கள் காண்போரை வியக்க வைக்கிறது.இது குறித்து நாசா வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, " விரைவில் கட்டப்படவிருக்கும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கிக்கான அறிவியல் நடவடிக்கைகளை இயக்குவதற்காக 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்சா ஹாப்கின்ஸ் (ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்) வளாகத்தில் @STSCI (விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனம்) என்ற ஒரு சுயாதீன நிறுவனத்தை நாசா நிறுவியது. இந்த தொலைநோக்கி நிறுவனம் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான அவதானிப்புகளை செயலாக்கியுள்ளது. அவற்றில் சில படங்கள. ” என்று விண்வெளி நிறுவனம் ட்வீட் செய்து அற்புதமான படங்களை பகிர்ந்து கொண்டது.

சமீபத்தில், சுமார் 30 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய்க் கோளில் ஆக்சிஜன் வாயுவை தயாரித்து நாசா சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. வேறொரு கோளில் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டு ஜூலையில் பெர்செவெரன்ஸ் என்ற உலவியுடன் நாசா அனுப்பிய மாக்சி கருவியின் உதவியுடன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறு பெட்டியைப் போன்ற வடிவத்தைக் கொண்ட மாக்சி, பெர்செவெரன்ஸ் உலவியின் வயிற்றுப் பகுதியில் வைத்து அனுப்பப்பட்டது. செவ்வாயின் வளி மண்டலம் 96% கார்பன் டை ஆக்சைடால் நிறைந்தது. ஆக்சிஜன் இருப்பதோ வெறும் 0.13 சதவிகிதம்தான். பூமியின் வளிமண்டலத்தில் 21 சதவிகிதம் ஆக்சிஜன் கலந்திருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Also read... 100 ஆண்டுகள் பழமையான மீன் - டெட்ராய்ட் ஆற்றில் அதிசயம்!

ஆக்சிஜனைப் பிரித்தெடுப்பதை விட கார்பன் டை ஆக்சைடில் இருந்து ஆக்சிஜனைத் தயாரிப்பதே எளிது என விஞ்ஞானிகள் முடிவு செய்தார்கள். கார்பன் டை ஆக்சைடு வாயுவானது இரண்டு ஆக்சிஜன் அணுக்களையும், ஒரு கார்பன் அணுவையும் கொண்டது. இதில் இருந்து ஒரு ஆக்சிஜன் அணுவைப் பிரித்தெடுத்திருக்கிறது மாக்சி. மீதமிருந்த ஒரு கார்பன் மற்றும் ஒரு ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட கார்பன் மோனாக்சைடு வாயு செவ்வாயின் வளி மண்டலத்திலேயே விடப்பட்டது. செவ்வாயில் மாக்சி இயந்திரம் தயாரித்த ஆக்சிஜனின் அளவு வெறும் 5 கிராம்தான். இதைக் கொண்டு மனிதனால் 10 நிமிடம்தான் சுவாசிக்க முடியும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: