Home /News /trend /

ஜூபிட்டர் கிரகத்தில் 'பெப்பரோனி' புயல் - வைரலாகும் நாசா வீடியோ

ஜூபிட்டர் கிரகத்தில் 'பெப்பரோனி' புயல் - வைரலாகும் நாசா வீடியோ

பெப்பரோனி புயல்

பெப்பரோனி புயல்

நாசாவின் இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது மற்றும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் (NASA) இன்ஸ்டாகிராம் பக்கம் விண்வெளி தொடர்பான தகவல்களை அறிய விரும்புவர்களும், ஆராய விரும்புவோருக்கும் ஒரு பொக்கிஷம் ஆகும்.

நாசா, நமது பூமி கிரகத்திற்கு வெளியே உள்ள விண்வெளி அதிசயங்களை வெளிப்படுத்தும் பதிவுகளை இன்ஸ்டாகிராம் வழியாக அவ்வப்போது பகிர்ந்து கொள்வது வழக்கம். நாசாவின் பெரும்பாலான இன்ஸ்டாகிராம் பதிவுகள் வெறும் தகவல்கள் மற்றும் சுவாரசியத்தை உள்ளடக்கிய போட்டோக்கள், வீடியோக்களாக மட்டுமின்றி அது கல்வி, கற்றலையும் சார்ந்தவைகளாகும்.

அதில் ஒன்று தான் - வியாழன் கிரகம் பற்றி நாசா ஷேர் செய்த ஒரு சுவாரசியமான வீடியோ. அதென்ன வீடியோ? ஜூபிட்டர் கிரகத்தில் என்ன நடக்கிறது? விண்வெளி சார்ந்த இந்த வீடியோவுடன் தேசிய பீட்ஸா தின வாழ்த்துக்களை நாசா சொன்னது ஏன்? இதோ முழு விவரங்கள்!

இரண்டு நாட்களுக்கு முன்பு, தேசிய பீட்சா தினத்தை கொண்டாடும் வகையில் நாசா ஒரு வீடியோவைப் பகிர்ந்தது. உடன் "இன்டர்பிளேனட்டரி பீட்ஸா தினம் எப்படி இருக்கிறது? எங்கள் ஜூனோ மிஷன் வழியாக ஜூபிடர் என்கிற பீட்சாவின் மேல் டாப்பிங் செய்யப்பட்டுள்ள "பெப்பரோனி" புயல்கள் கண்டறியப்பட்டன" என்கிற கேப்ஷனையும் நாசா எழுதியது.

மேலதிக விளக்கத்தில், "நீங்கள் இங்கே என்ன பார்க்கிறீர்கள் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள்: இது வியாழன் கிரகத்தின் வட துருவத்தின் இன்ஃப்ராரெட் (infrared ) காட்சி ஆகும். நாசாவின் சோலார் சிஸ்டம் மிஷன் (NASA Solar System Mission) ஆன ஜூனோவில் (JUNO) உள்ள ஜோவியன் இன்ஃப்ராரெட் அரோரல் மேப்பர் (Jovian Infrared Auroral Mapper - JIRAM) கருவியால் சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து பெறப்பட்ட படங்களை வைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது.” என்றும் நாசா தெரிவித்துள்ளது மேலும் அடுத்த சில வரிகளின் வழியாக, நாசா குறிப்பிட்ட விண்வெளி நிகழ்வைப் பற்றி மேலும் பகிர்ந்து கொண்டது.

இன்ஸ்டாகிராம் வழியாக நாசா பகிர்ந்த வியாழன் கிரகத்தின் "பெப்பரோனி" புயல்களின் வீடியோ இதோ: 
View this post on Instagram

 

A post shared by NASA (@nasa)


நாசாவின் இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது மற்றும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் நாசாவின் இந்த வீடியோவானது, மக்கள் பல்வேறு வகையான கமெண்ட்களை பதிவு செய்யவும் வழிவகுத்துள்ளது.

ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் “எக்ஸ்ட்ரா லார்ஜ் பெப்பரோனி பீட்ஸா! மிகவும் சூடாகவும் காரமாகவும் இருக்கிறது” என்று கமெண்ட் செய்து உள்ளார். "இது கிரியேட்டிவ் ஆக உள்ளது. நீங்கள் அங்கு என்ன செய்தீர்கள் என்று நான் பார்க்கிறேன், ”என்று மற்றொரு இன்ஸ்டாகிராம் பயனர் கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டு உள்ளார். ஒருவர் வெறுமனே "நைஸ்" என்று கமெண்ட் செய்து உள்ளார். பலர் தங்கள் ரியாக்ஷன்களை வெளிப்படுத்த ஃபயர் எமோடிகான்களை கமெண்ட்களாக போஸ்ட் செய்துள்ளனர்.

Also read... இதுக்கு பேர் தான் சார் கடவுள்... சிறுமியை காக்க ஓடும் ரயிலுக்கு நடுவில் குதித்த இளைஞர்!

வியாழன் கிரகம், அதாவது ஜூபிட்டர் கிரகமானது சூரியனில் இருந்து ஐந்தாவது கிரகம் ஆகும் மற்றும் சூரிய குடும்பத்தின் மிகவும் பெரிய கிரகமும் ஆகும். இது சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற அனைத்து கோள்களையும் விட இரண்டரை மடங்குக்கும் அதிகமான நிறை (mass) கொண்ட ஒரு வாயு கிரகம் (gas giant) ஆகும். ஆனாலும் கூட சூரியனோடு ஒப்பிடும் போது, இதன் நிறை ஆயிரத்தில் ஒரு பங்கை விட சற்று குறைவாகவே உள்ளது.

இப்படியான ஜூபிட்டர் கிரகத்தின் "பெப்பரோனி புயல்கள்" குறித்த நாசாவின் வைரல் வீடியோவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் செய்யுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: NASA

அடுத்த செய்தி