ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கண்சிமிட்டி சிரித்ததா சூரியன்? திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன? விளக்கமளித்த நாசா!

கண்சிமிட்டி சிரித்ததா சூரியன்? திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன? விளக்கமளித்த நாசா!

கண்சிமிட்டி சிரித்த சூரியன்

கண்சிமிட்டி சிரித்த சூரியன்

Smiling Sun | கண்களை சிமிட்டியபடி சிரிக்கும் சூரியனின் படத்தை வெளியிட்டுள்ளது, Solar Dynamics Observatory என்ற ஆய்வு நிறுவனம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சூரியன் கண்சிமிட்டி சிரிப்பதைப் போன்ற படத்தை வெளியிட்டுள்ள நாசா, இதற்கு முன்பு வெளியிட்டுள்ள சூரியனின் படங்களையும், அது தொடர்பான விளக்கத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

  ஆப்பிள் கீழே விழுந்தபோது, அதன் மூலம் ஐசக் நியூட்டன் கண்டறிந்த புவி ஈர்ப்பு விசையைக் காட்டிலும், 28 மடங்கு அதிக சக்தி கொண்டது சூரியனின் ஈர்ப்பு விசை.  பக்கத்தில் போனாலே பஸ்பம்போல் எரித்து விடக் கூடிய வெப்பத்தை கொண்ட சூரியன், நம்மை பார்த்து சிரிப்பது புதிதில்லை...சிறு குழந்தைகளுக்கான வீடியோ பாடல்கள் தொடங்கி, விளம்பரங்கள் வரை பல வகையான சிரிக்கும் சூரியன்களை பார்த்திருக்கிறோம்.

  இந்த நிலையில்தான், கண்களை சிமிட்டியபடி சிரிக்கும் சூரியனின் படத்தை வெளியிட்டுள்ளது, Solar Dynamics Observatory என்ற ஆய்வு நிறுவனம்.விண்வெளியைத் தொடர்ந்து ஆய்வு செய்து அமெரிக்காவைச் சேர்ந்த நாசாவின் துணை நிறுவனம்தான், இந்த Solar Dynamics Observatory. 2010-ம் ஆண்டில் இருந்து சூரியனை கண் சிமிட்டாமல், கவனித்துக் கொண்டிருக்கிறது, இந்த நாசாவின் துணை அமைப்பு. சூரிய வெடிப்பு, சூரிய புயல், சூரியனைச் சுற்றி உருவாகும் காந்த அலைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதே, இதன் அன்றாடப் பணி.

  Read More : படத்திற்குள் மறைந்திருக்கும் பாம்பை 30 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் தான் ஜீனியஸ் - வைரலாகும் ஆப்டிகல் இல்யூசன் ?

   அத்துடன், சூரியனின் உட்புறம், அதன் வெப்ப வெளியீடு மற்றும் வளிமண்டலத்தையும் கண்காணிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.இதன்மூலம் சூரியனின் தோற்றம், அதற்குள் மறைந்திருக்கும் அறிவியல் மர்மங்கள் மற்றும் மாற்றங்களை ஆய்வு செய்வதே முக்கியப் பணி.முதன்முறையாக, நாசாவால் கடந்த 2014 அக்டோபர் மாதத்தில் வித்தியாசமாக படம்பிடிக்கப்பட்டது நம் சூரியன்.நாம் வழக்கமாக பார்க்கும் சூரியனைப் போல இல்லாமல், நெருப்பு வளையத்திற்குள் ஆங்காங்கே தீ எரிவதைப் போல, இருந்தது அந்த புகைப்படம்.

  பார்ப்பதற்கு இரண்டு கண்களையும், ஒரு வாயையும் கொண்ட அரக்கனைப் போல இருந்தது, அந்த படத்தில் இருந்த சூரியன்.கோரமாக சிரிப்பதைப் போன்ற சூரியனின் அந்த முகத்திற்கு, ஜாக் ஓ லாட்டர்ன் என்று பெயர் வைத்தது நாசா.ஜாக் ஓ லாட்டர்ன் என்பது, ஹாலோவீன் பண்டிகையின்போது கிடைக்கும் பொருட்களில் வரையப்படும் உருவத்தின் பெயர்.

  Read More : நாசா வெளியிட்ட சிரிக்கும் சூரியன் படம் - எமோஜி போல் இருக்கும் சூரியன்!

  171 ஆங்ஸ்ட்ராம்ஸ் மற்றும் 193 ஆங்ஸ்ட்ராம்ஸ் என்ற இருவகையான புறஊதா கதிர்வீச்சுகளையும், காந்த அழுத்தங்களையும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய உதவியது அந்த புகைப்படம்.இவ்வாறு தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்ததன் அடிப்படையிலேயே தற்போது கிடைத்துள்ளது, கண்சிமிட்டி சிரிக்கும் சூரியனின் படம்.

  8 ஆண்டுகளுக்கு முன்பு கோரமாக இருந்த சூரியனின் முகம், இப்போதுதான் மென்மையான சிரிப்புக்கு மாறியிருப்பதை காட்டுகிறது இந்த புகைப்படம்.இயற்கை மீது மனித இனம் அக்கறை கொள்ளாவிட்டால், இந்த முகமும் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கோரமாக மாறலாம்..அதைத் தவிர்க்க இயற்கையோடு இணைந்து வாழ முயற்சிப்பதே நமது முக்கிய கடமை.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Sun, Trending, Viral