23 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வியாழனின் அற்புத காட்சி - இன்ஸ்டாவில் பகிர்ந்த நாசா

வியாழனின் அரோரஸ் காட்சி

அரோரா என்பது வானத்தில் ஒளிரும் இயற்கை ஒளி ஆகும். அரோராக்களின் நிறங்கள் நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் ஆரஞ்சு வண்ணங்களாக மாறுகின்றன.

  • Share this:
அரோராக்கள் என்பது சூரியக் காற்றினால் காந்த மண்டலத்தில் ஏற்படும் இடையூறுகளின் விளைவாக தோன்றும் ஒளிக்காட்சியாகும். இவை துருவ ஒளி , வடதுருவ ஒளி அல்லது தென் துருவ ஒளி என அழைக்கப்படுகின்றன. இது பூமியின் வானத்தில் ஏற்படும் இயற்கையான ஒளி காட்சி ஆகும். இது முக்கியமாக உயர் அட்சரேகை பகுதிகளில் காணப்படுகிறது. பூமியில் இந்த துருவ ஒளியை பார்ப்பது மிகவும் சாதாரண விஷயம். அதுவே சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் நிகழ்வது ஒரு ஆச்சர்யமான விஷயம் தான். அந்த வகையில், தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் ஹப்பிள் தொலைநோக்கி வியாழன் கோளின் மீது அரோராக்கள் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதைப் பற்றிய ஒரு அற்புதமான படத்தைப் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சூரிய மண்டலத்தில் மிகப்பெரிய கிரகம் வியாழன். இது மிகவும் பெரியது, சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற அனைத்து கிரகங்களும் அதற்குள் பொருந்தக்கூடும். அதிலும் இந்த கிரகத்தில் நடக்கும் சில அதிசயங்களை இப்போது நம்மால் பார்க்க முடிகிறது என்பதே ஆச்சர்யம் நிறைந்த ஒன்று. நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி 1998-ல் எடுத்த வியாழன் அரோராக்களின் படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளது.. அதில் பூமியைப் போலவே, மாபெரும் கிரகத்தின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களில் வண்ணங்களின் மேஜிக்கல் அலையை காணமுடிகிறது. 

இந்த நிகழ்வு வியாழனில் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகும். அந்த பதிவின் கேப்சனில் நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி குறிப்பிட்டுள்ளதாவது, இந்த புகைப்படங்கள் புற ஊதா ஒளியில் எடுக்கப்பட்டது என விளக்கியுள்ளது. மேலும் அரோராக்கள் வியாழனின் மேல் வளிமண்டலத்தில் தோன்றிய அற்புதமான ஒளி கர்டைன் என்றும் வர்ணித்துள்ளது. இந்த படங்கள் பார்ப்பதற்கு வியாழனின் வடக்கு மற்றும் தென் துருவங்களை ஒளிரும் வாயு சுற்றிக் கொண்டிருப்பது போல தெரிகின்றன. இந்த பதிவு நேற்று பகிரப்பட்டதிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேலான இன்ஸ்டாகிராம் யூசர்களால் லைக் செய்யப்பட்டுள்ளது. நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர்பவர்களும் புகைப்படத்தைப் பற்றி தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

  
View this post on Instagram

 

A post shared by Hubble Space Telescope (@nasahubble)

நாசாவின் கூற்றுப்படி, கிரகத்தின் காந்தப்புலத்திலும், மேல் வளிமண்டலத்திலும் உயர் ஆற்றல் எலக்ட்ரான்கள் ஓடும்போது வியாழன் மீது அரோராக்கள் உருவாகின்றன. அங்கு அவை வளிமண்டல வாயுக்கள் செயல்பாட்டில் கலப்பதால் ஒளிருகின்றன. இந்த அரோரா பூமியின் துருவப் பகுதிகளில் நிகழும் அதே நிகழ்வை ஒத்திருப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், ஹப்பிள் தொலைநோக்கி மூலம் புற ஊதா ஒளியில் பிடிக்கப்பட்ட படங்களில் வியாழனின் மிகப்பெரிய நிலவுகளான அயோ, கன்மீட் மற்றும் யூரோபா ஆகிய மூன்றின் ஒளிரும் தடங்கள் தெரியும்.

 

இதனை தொடர்ந்து நேஷனல் ஜியோகிராஃபிக் வெளியிட்ட கூற்றுபடி, அரோரா என்பது வானத்தில் ஒளிரும் இயற்கை ஒளி ஆகும். அரோராக்களின் நிறங்கள் நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் ஆரஞ்சு வண்ணங்களாக மாறுகின்றன. அவை மெதுவாக பறக்கும் ஜன்னல் கர்டைன் போன்ற வடிவத்தில் மாறுகின்றன. அரோராவின் நிறம், அயான்கள் ஆக்ஸிஜன் அணுக்களை தாக்கும் உயரத்தைப் பொறுத்து ஏற்படுகின்றன. அயான்கள் மற்றும் ஆக்ஸிஜனின் தொடர்பு வளிமண்டலத்தில் அதிகமாக நடந்தால், அது ஒரு சிவப்பு பிரகாசத்தை உருவாக்குகிறது. அதுவே நம்மால் காணக்கூடிய மிகவும் பொதுவான பச்சை அரோரா குறைந்த உயரத்தில் நடக்கிறது.

இருப்பினும், அவை இரவில் மட்டுமே தெரியும். பொதுவாக அரோராக்கள் குறைந்த துருவப் பகுதிகளில் மட்டுமே தோன்றும். பூமியில், அரோராக்கள் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவும் தெரியும். அவை முறையே பூமத்திய ரேகைக்கு 66.5 டிகிரி வடக்கு மற்றும் தெற்கே உள்ளன. வடக்கில் தோன்றும் அரோரா காட்சி அரோரா பொரியாலிஸ் அல்லது வடதுருவ ஒளி என்று அழைக்கப்படுகின்றன. அதுவே தெற்கில் இருக்கும்போது, இது அரோரா ஆஸ்ட்ராலிஸ்  அல்லது தென் துருவ ஒளி என்று அழைக்கப்படுகின்றன.
Published by:Tamilmalar Natarajan
First published: