மாணவர்களின் முயற்சியால் ஆன்லைனில் விற்கப்படும் நரிக்குறவ மக்களின் ஊசி, பாசி மணிகள்..!

மாணவர்களின் முயற்சியால் ஆன்லைனில் விற்கப்படும் நரிக்குறவ மக்களின் ஊசி, பாசி மணிகள்..!
  • Share this:
பிளாட்பாரத்தில் விற்கப்பட்டு வந்த நரி குறவர்களின் ஊசி மணி, பாசி மணி தற்போது ஆன்லைனில் விற்பனையாகி வருகிறது. சமூகப்பணி மாணவர்களின் முயற்சியின் மூலம் நரிக்குறவ சமூக மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு வருவது எப்படி என்பது குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்.

நரிக்குறவ மக்கள் தங்கள் பரம்பரை தொழிலா ஊசி, மணி, பாசி மணி தயாரித்து வருகின்றனர். வழக்கமாக தெருத்தெருவாகச் சென்று தங்கள் தயாரிப்புகளை கூவிக்குவி விற்றுவந்த இவர்கள், பின்னர் பிளாட்பாரத்தில் கடையமைத்து அவற்றை விற்கத் தொடங்கினர்.

தற்போது காலம் மாறிவிட்டதால் ஆன்லைன் வியாபாரத்திற்கு இவர்களும் தயாராகிவிட்டனர். நரிக்குறவ மக்களின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் மெட்ராஸ் சமூகப்பணி கல்லூரியின் தேவா, சிவரஞ்சினி, ஷ்ராவ்யா, ரித்திகா ஆகிய 4 மாணவர்கள் தான். இவர்கள் nakuras.com என்ற இணையதளத்தை தொடங்கி நரிக்குறவ மக்களின் பொருட்களை விற்பனை செய்வதுடன் இந்த காலத்திற்கு ஏற்ப எப்படி பொருட்களை தயாரிப்பது என பயிற்சியும் வழங்குகின்றனர்.


கல்லூரி மாணவர்களின் ஊக்கமும், பயிற்சியும் தங்களுக்கு புதிய வாழ்வை ஏற்படுத்தி தந்திருப்பதாகக் கூறும் நரிக்குறவ பெண்கள், இதுநாள் வரை அவமானங்களை மட்டுமே சந்தித்து வந்த தங்களுக்கு இந்த மாணவர்களின் கைத்தட்டல் ஆனந்தத்தை அளித்ததாக நெகிழ்கின்றனர்.

எங்கு கடை போட்டாலும் அதற்கு தடை போடும் போலீசால் தங்கள் வாழ்வாதாரம் நலிவடைந்திருந்ததாகவும், நகுராஸ் இணையதளம் மூலமாக தங்களுக்கு 3 வேளை உணவு கிடைப்பதாகவும் கூறுகிறார் துளசி.

சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட நரிகுறவர் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட புதிய முயற்சியை மேற்கொண்டுள்ள இந்த மாணவர்களின் செயல் பாராட்டுக்குரியது. 
First published: December 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading