Home /News /trend /

Piyush Goyal: சரக்கு ரயில்களை ஆய்வு செய்யும் பணியில் களமிறக்கப்பட்ட பெண்கள் குழு - மத்திய அமைச்சர் ஷேர் செய்த வீடியோ!

Piyush Goyal: சரக்கு ரயில்களை ஆய்வு செய்யும் பணியில் களமிறக்கப்பட்ட பெண்கள் குழு - மத்திய அமைச்சர் ஷேர் செய்த வீடியோ!

பெண்கள் குழு

பெண்கள் குழு

அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டில், மகாராஷ்டிராவின் கல்யாண் கூட்ஸ் யார்டில் சரக்கு ரயில்களை தீவிரமாக பரிசோதிக்க அனைத்து பெண்கள் குழு அமைக்கப்பட்டது என்று தகவல் தெரிவித்துள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
இந்தியாவில் பல ஆண்டுகளாகவே பெண்கள் அதிகாரம் என்பது ஒரு பரபரப்பான விவாதத்திற்குரிய தலைப்பாகவே இருந்து வருகிறது. காலங்கள் மாறி படிப்படியான மாற்றங்கள் ஏற்பட்டு தற்போது அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டி போட்டு கொண்டு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். திறமைகள், தனித்துவம், உறுதி மற்றும் எல்லா துறையிலும் சிறந்து விளங்குவதன் மூலம் பெண்கள் உலகை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். விளையாட்டு, பொழுதுபோக்கு மட்டுமின்றி காவல்துறை, ராணுவம், ஆயுதப்படைகள், மருத்துவ துறை என சகலத்திலும் தடுத்து நிறுத்த முடியாத உயரத்திற்கு பெண்கள் சென்று விட்டனர்.

இந்நிலையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்களின் சக்தி என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை ஷேர் செய்து உள்ளார். பெண்கள் சக்தியை வெளிப்படுத்தும் விதமாக மகாராஷ்டிரா மாநிலத்தின் கல்யாண் பகுதியில் சரக்கு ரயிலை ஆய்வு செய்ய ஆல் வுமன் டீம் (all women team) என்ற முழுவதும் பெண்கள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது தொடர்பான வீடியோ தான் அது. உடல் ரீதியாக கடினமாக உழைத்து செய்ய கூடிய தீவிரமான வேலைகள் பெண்களுக்கெல்லாம் கொஞ்சமும் செட் ஆகாது என்று பல ஆண்டுகளாக சொல்லி வருபவர்களை நம்பிக்கையை பொய்யாக்க இந்திய ரயில்வேயின் ‘மகளிர் சக்தி’ -யை வெளிக்காட்டும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டில், மகாராஷ்டிராவின் கல்யாண் கூட்ஸ் யார்டில் சரக்கு ரயில்களை தீவிரமாக பரிசோதிக்க அனைத்து பெண்கள் குழு அமைக்கப்பட்டது என்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பெண்கள் குழு சரக்கு ரயில்களில் கியர் பரிசோதனை, ஏர் பிரேக் சோதனை, அண்டர் ஃபிரேம்கஸ், சைடு பேனல்ஸ் மற்றும் ரேக் அட்டேன்ஷன் உள்ளிட்டவற்றை பரிசோதிக்க இந்த குழு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி வீடியோ ஒன்றையும் இணைத்து ட்வீட் செய்து உள்ளார்.

Also read... Remdesivir: குழந்தைகளுக்கு ரெமிடெசிவர், ஸ்டீராய்டு மாத்திரைகள் வேண்டாம் - புதிய நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!

அமைச்சர் ஷேர் செய்துள்ள வீடியோவில் சரக்கு ரயிலின் முக்கிய பாகங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்யும் சில பெண்கள், சரக்கு ரயில் பெட்டிகள் இணையும் இடத்தில் இருக்கும் சில பாகங்களை சரி செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கு சுத்தியல் உள்ளிட சில உபகரணங்களை பயன்படுத்தி கடின வேலையை செய்கின்றனர்.அமைச்சர் கோயல் ஷேர் செய்த இந்த வீடியோ 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியூஸ்களையும் கிட்டத்தட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ் செய்துள்ள பலரும் "பெண்களின் சக்தி"-யை புகழ்ந்துள்ளனர். பாதுகாப்பை உறுதி செய்வதில் அவர்கள் மிகச் சிறந்த வேலையைச் செய்வார்கள், பெண்கள் நிச்சயமாக மிகவும் நேர்மையானவர்கள், கடினமாக உழைப்பார்கள் என்று பலரும் all women team-ஐ பாராட்டி வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Indian Railways, Piyush Goyal

அடுத்த செய்தி