கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் ஒன்றாக இருக்க காதலனை கணவராக்கிய பெண் காவலர்: தேடிவந்த மனைவி

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் ஒன்றாக இருக்க காதலன் பெயரை கணவர் என்று கொடுத்த பெண் காவலரால் பிரச்னை உருவாகியுள்ளது.

கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் ஒன்றாக இருக்க காதலனை கணவராக்கிய பெண் காவலர்: தேடிவந்த மனைவி
மாதிரிப் படம்
  • Share this:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பெண் காவலராக பணியாற்றிவந்தவரின் உடன் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, இந்த பெண் காவலரும் கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் சேர்க்கப்பட்டார். தனிமைப்படுத்தல் முகாமில் அவருடைய உறவினர்கள் குறித்து விவரங்களைக் கேட்கும்போது, ‘என்னுடைய கணவர் அஞ்சல்துறையில் பணியாற்றிவருகிறார். அவரையும் என்னுடன் தனிமைப்படுத்தும் முகாமில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதனையடுத்து, அவரையும் காவல்துறை பயிற்சி முகாமில் ஏற்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தும் முகாமில் கொண்டுவந்து சேர்த்தனர்.

ஆனால், பெண் காவலர் கூறிய நபர், அவருடைய கணவர் கிடையாது. அவருடைய காதலர். அவர், ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவியுடன் வசித்துவருகிறார். அந்தப் பெண்ணுக்கு கணவர் தனிமைப்படுத்தல் முகாமில் அடைக்கப்பட்ட விவரம் தெரியாமல் இருந்துள்ளது. மூன்று நாள்களாக வீடு திரும்பவில்லை என்று வருத்தத்தில் இருந்துள்ளார். பின்னர், அவருடைய தனிமைப்படுத்தல் முகாமில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்பிறகு, அவர், தனிமைப்படுத்தல் முகாமுக்கு கணவரைப் பார்க்க சென்றுள்ளார். அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, கணவரின் நடவடிக்கை குறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் அளித்தார் பாதிக்கப்பட்ட அந்தப் பெண். அதனையடுத்து, பெண் காவலரின் காதலரை வேறு தனிமைப்படுத்தல் முகாமில் சேர்த்தனர்.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு ப்ராஜெக்ட் ஒன்றில் ஒன்றாக வேலை செய்தபோது பெண் காவலருக்கும் அவருக்கும் இடையை காதல் ஏற்பட்டுள்ளது என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading