டியர் விக்ரம் லேண்டர் உனக்கு அபராதம் விதிக்கமாட்டோம்! நாக்பூர் காவல்துறையின் டைமிங் ட்வீட்

நாக்பூர் நகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் லேண்டர் குறித்து ஒரு ட்விட் நகைச்சுவையாக பதிவிடப்பட்டுள்ளது.

news18
Updated: September 9, 2019, 3:37 PM IST
டியர் விக்ரம் லேண்டர் உனக்கு அபராதம் விதிக்கமாட்டோம்! நாக்பூர் காவல்துறையின் டைமிங் ட்வீட்
விக்ரம், லேண்டர்
news18
Updated: September 9, 2019, 3:37 PM IST
சிக்னலை மீறியதற்காக உங்களுக்கு நாங்கள் அபராதம் விதிக்கமாட்டோம். தயவு செய்து திரும்ப வந்துவிடு என்று நாக்பூர் காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

சந்திரயான்-2 வின்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர், செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் நிகழ்வை உலகம் முழுவதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், நிலவுக்கு 2.1 கி.மீ தூரத்துக்கு சென்ற நிலையில் லேண்டரிடன் தகவல் தொடர்பு துண்டானது. பின்னர், நேற்று ஆர்பிட்டரில் உள்ள கேமரா மூலம், லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது.


லேண்டர் தகவல் துண்டான நிகழ்வு இந்தியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் இஸ்ரோ குறித்தும், லேண்டர் குறித்துமே அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஒரு நம்பிக்கை அளித்துள்ளது. இந்தநிலையில், நாக்பூர் நகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் லேண்டர் குறித்து ஒரு ட்விட் நகைச்சுவையாக பதிவிடப்பட்டுள்ளது.

அந்த ட்விட் தற்போது வைரலாகிறது. அதில், ‘டியர் விக்ரம், தயவுசெய்து பதில்கூறு, சிக்னலை மீறிவிட்டதற்காக நாங்கள் உன் மீது அபராதம் விதிக்கப்போவதில்லை’ என்று பதிவிட்டுள்ளனர். அந்த ட்விட் வைரலாகிவருகிறது. ஏற்கெனவே, செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, பத்து மடங்கு அதிகமாக அபராதத் தொகை விதிக்கப்பட்டு வருகிறது.
அதற்கு பதிலளிக்கும் நெட்டிசன்கள், நிலா உங்கள் எல்லைப் பகுதி கிடையாது. இது பெங்களூருவின் எல்லைப் பகுதியில் வருகிறது. விக்ரமிடம் இன்சூரன்ஸ் இல்லை. அதனால், 2000 ரூபாய்காக பயப்படுகிறான்’ என்று பதிவிட்டுவருகின்றனர்.

Also see:

First published: September 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...