கொரோனா சோதனைக்கு தனியாக மருத்துவமனைக்கு சென்ற 3வயது சிறுமி! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

மூன்று வயது சிறுமி

நாகாலாந்தில் பெற்றோர்கள் வயல்வேலைக்கு சென்ற நிலையில், 3 வயது சிறுமி தனியாக அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.

 • Share this:
  வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் காய்ச்சல், சளி இருப்பவர்கள்கூட மருத்துவமனைக்கு செல்ல அச்சப்படுகின்றனர். கொரோனா பாசிடிவ் என வந்துவிடுமோ என்ற பயத்தில் பரிசோதனைக்கு செல்வதற்கு பயந்து வீட்டில் இருப்பவர்கள் ஏராளம். அவர்களுக்கெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நாகாலாந்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி தனியாக அருகில் இருக்கும் சுகாதார மையத்துக்கு சென்றுள்ளார். முந்தைய நாள் இரவில் சளி அதிகமாக இருந்ததால், பெற்றோர்கள் வயல் வேலைக்கு சென்ற நேரத்தில், சுகாதார மையத்துக்கு சென்று பரிசோதனை செய்யுமாறு கூறியுள்ளார்.

  அவரைப் பார்த்த சுகாதார மையத்தினர் வியப்படைந்ததுடன், பெற்றோர்கள் எங்கே எனக் கேட்டுள்ளனர். அவர்கள் வயல் வேலைக்கு சென்றுவிட்டதாகவும், தனக்கு சளி இருப்பதால், பரிசோதனை செய்து கொள்வதற்காக வந்ததாகவும் சுகாதாரமைய செவிலியர்களிடம் அவர் கூறியுள்ளார். சிறுமி செவிலியர் முன்பு அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜுன்ஹெபோடோ மாவட்டத்தின், கட்டாஷி தெஹ்ஸில் பகுதியில் ஹெபோலிமி சுகாதார மையம் உள்ளது. கிராமப் புற பகுதியில் அமைந்திருக்கும் மையத்துக்கு அருகாமையில் 3 வயது சிறுமி லிப்பாவி (Lipavi)-யின் வீடு அமைந்துள்ளது.

  அவருக்கு முந்தைய நாள் இரவு சளி அதிகமாக இருந்துள்ளது. இது குறித்து அவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் வழக்கம்போல் வயல்வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் இருந்த சிறுமி மாஸ்க் அணிந்து கொண்டு அருகாமையில் இருக்கும் சுகாதார மையத்துக்கு நடந்து சென்று, தனக்கு சளி இருப்பதாகவும், உரிய பரிசோதனை செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். பெற்றோர் இல்லாமல் தனியாக சிறுமி தனியாக வந்ததை எண்ணி வியப்படைந்த செவிலியர்கள், அவருக்கு உரிய பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமி சுகாதாரமையத்துக்கு தனியாக வந்தபோது அவர்கள் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்  இந்தப் புகைப்படத்தை நாகாலாந்து பாஜகவின் யுவ மோர்ச்சா மாநில தலைவர் பெஞ்சமின் யெப்தோமி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கொரோனா காலத்தில் உரிய பரிசோதனை செய்து தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுக்கும் மக்களுக்கு மத்தியில், 3 வயது சிறுமி தனியாக சுகாதாரமையத்துக்கு சென்று மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளார் என பாராட்டு தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும், சிறுமி எப்படி தனியாக செல்ல முடியும் என கேள்வி எழுப்பியவருக்கு பதில் அளித்த அவர், சுகாதாரமையம் கிராமப்புறத்தில் அமைந்துள்ளதாகவும், சிறுமியின் வீட்டிற்கு அருகாமையில் இருப்பதால் அவர் தனியாக சென்றுள்ளார் என்றும் விளக்கம் அளித்துள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சிறுமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். தடுப்பூசி மற்றும் கொரோனா விழிப்புணர்வு பணிகளுக்கு சிறுமியை விளம்பர தூதராக நியமிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: