அஜித் சொன்னமாதிரி சட்டசபையை தெறிக்க விடுவோம் - சீமான்

சீமான் | அஜித்

அஜித் சொன்ன மாதிரி சட்டசபையை தெறிக்க விடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கட்சி தொடங்கிய நாளிலிருந்தே தேர்தலில் கூட்டணிக்கே இடமில்லை என்று தனித்தே களம் கண்டு வருகிறது நாம் தமிழர் கட்சி. இந்தமுறையும் முதல் ஆளாக 234 தொகுதிக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த சீமான் அதில் 50% பெண்களுக்கு இடமளித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

  ஆரம்பத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று அறிவித்த சீமான் பின்னர் திருவொற்றியூர் களமிறங்குவதாக தெரிவித்தார். இதையடுத்து 234 தொகுதிகளிலும் தனது கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற சீமான் இந்தமுறை திறந்த வேனில் முதல்முறையாக பிரசாரம் மேற்கொண்டார். நேற்று இரவு 7 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் கடைசியாக தான் போட்டியிடும் திருவொற்றியூர் பொதுக்கூட்டத்தில் பேசி தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

  சீமான் திருவொற்றியூர் பொதுக்கூட்டத்தில் பேசிய போது அங்கு கூடியிருந்த மக்கள் அவரை பாடல் பாடும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் கமல்ஹாசன் பாடிய ‘நஞ்சை உண்டு புஞ்சை உண்டு’ என்ற பாடலை ரசித்துப் பாடினார் சீமான். அதைக்கேட்ட மக்கள் உற்சாகமாகினர்.

  தொடர்ந்து பேசிய சீமான், “அஜித் சொன்ன மாதிரி சட்டசபையை தெறிக்க விடுவோம். நாட்டை என்னிடம் கொடுத்தால் தலைசிறந்த நாடாக்கிவிடுவேன். இந்த தொகுதியை எனக்கு கொடுத்தீர்கள் என்றால் தமிழ்நாட்டின் சிறந்த தொகுதியாக மாற்றி விடுவேன். நான் பிரச்னைகளை கேட்க வரவில்லை. தீர்க்க வந்தவன். நாங்கள் நினைக்க பிறந்தவர்கள் அல்ல. நிரூபிக்க பிறந்தவர்கள்” என்று அதிரடியாக பேசினார் சீமான்.
  Published by:Sheik Hanifah
  First published: