• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • வீட்டின் மீது ஆட்டம் போட்ட இரண்டு பாம்புகள் - பயத்துடன் ரசித்த மக்கள்!

வீட்டின் மீது ஆட்டம் போட்ட இரண்டு பாம்புகள் - பயத்துடன் ரசித்த மக்கள்!

பாம்புகள்

பாம்புகள்

வீட்டின் மேற்கூரை ஒன்றின் மீது இரண்டு பாம்புகள் ஆனந்தமாக நடமாடும் வீடியோவை ஐ.பி.எஸ் அதிகாரி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

  • Share this:
நாகா ஆட்டம் அல்லது நாகினி டேன்ஸ் என கூறப்படும் இரண்டு நாகப் பாம்புகள் ஒன்றாக வளைந்து, நெளிந்து ஆடும் ஆட்டம், அதியசமாகவே மக்களின் கண்களின் தென்படும். வனப்பகுதிகளின் வழியே அதிகம் பயணிப்பவர்களுக்கு எதாவதொரு நாளில் இரண்டு பாம்புகளும், ஒன்றின் மீது ஒன்று சுற்றி, வளைந்து நெளிவதை பார்க்க முடியும்.

ஆனால், ஐ.பி.எஸ் அதிகாரி ரூபின் சர்மா பகிர்ந்துள்ள டிவிட்டர் வீடியோவில், குடியிருப்புகள் அதிகமாக உள்ள, மக்கள் நடமாட்டம் மிக்க ஓர் இடத்தில் வீட்டின் மேற்கூரை ஒன்றின் மீது இரண்டு பாம்புகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு ஆனந்தமாக விளையாடுகின்றன.

இதனை அப்பகுதியில் வசிக்கும் மக்கள், சிறிது தொலைவில் இருந்துவாறு ரசித்துள்ளனர். வீடியோவாகவும் பதிவு செய்துள்ள மக்கள், சமூகவலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். நெட்டிசன்களிடையே வரவேற்பை பெற்றுள்ள இந்த வீடியோ சுமார் 2.20 நிமிடங்கள் உள்ளது. வீடியோவைப் பார்த்த சில நெட்டிசன்கள் கண்கொள்ளாக் காட்சி என தெரிவித்துள்ளனர். மேலும் சிலர், பாம்புகள் இரண்டும் இனப்பெருக்கம் செய்கிறதா? இல்லை இரண்டும் சண்டையிட்டுக் கொள்கிறதா? நடனமாடுகின்றனவா? என தங்களின் சந்தேகத்தையும் கேள்வியாக பதிவு செய்துள்ளனர்.

ALSO READ |  தண்ணீர் தொட்டியில் சிக்கி கொண்ட புதிதாக பிறந்த யானை குட்டி - வைரலாகும் மீட்பு வீடியோ!

வீடியோவை பதிவில், பாம்புகள் இனக்கலப்பில் ஈடுபவதால், அதனை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என பெண் ஒருவர் பேசும் குரலும் உள்ளது. விசாரணையில், இரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்த ஆண் பாம்புகள் என தெரியவந்துள்ளது. பாம்புகள் இரண்டும் நடனமும் ஆடவில்லை, இனப்பெருக்கத்திலும் ஈடுபடவில்லை எனவும், தங்களின் எல்லைப் பகுதியை பிரித்துக்கொள்வதில் இரண்டுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

 

 



 

இதுவரை சுமார் அயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள இரண்டு நாகப் பாம்புகளின், சண்டை வீடியோ, டிவிட்டரில் தொடர்ந்து பலரும் ரசித்து பரப்பி வருகின்றனர். அண்மையில், யானைகள் தினத்தன்று ஐ.எப்.எஸ் அதிகாரி ஒருவர் பகிர்ந்த யானைகள் வீடியோ ஒன்றும் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், பள்ளம் ஒன்றில் இறங்குவதற்குப பெரிய யானை கடுமையாக போராடுகிறது.

ALSO READ |  2 லிட்டர் சோடாவை வெறும் 19 வினாடிகளுக்குள் குடித்து கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்கர்..

கால்களை முழங்காலிட்டு, ஒருவழியாக அந்தப் பள்ளத்தில் இறங்கிவிடுகிறது. பின்னால், வந்த குட்டி யானை ஸ்மார்டாக பள்ளத்தைக் கடப்பது, நெட்டிசன்களை ரசிக்க வைத்தது. அதாவது, பள்ளத்தில் இரண்டு கால்களையும் முழங்காலிட்டு, சறுக்கியவாறு பெரிய யானை பள்ளத்தைக் கடக்கும். குட்டி யானை, நிலத்தின் சமதளப் பரப்பில் படுத்து, உருண்டவாறு, அந்தப் பள்ளத்தில் எளிமையாக இறங்கிவிடும். இது பார்ப்பவர்களுக்கு நிச்சயம் சிரிப்பையும் வரவழைக்கும்.

 

 



 

பெரிய யானை மற்றும் குட்டி யானையின் இந்த வீடியவை வைத்து மீம்ஸூகளும் இணையத்தில் வைரலானது. குறிப்பாக, ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் சீனியர் மற்றும் ஜூனியர்களின் ஸ்மார்ட் ஐடியாவை குறிப்பிட்டு, நெட்டிசன் ஒருவர் வீடியோவை பகிர்ந்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: