டிவிட்டரில் ‘பாரநார்மாலிட்டி இதழ்’ என்ற பக்கத்தில் 33 வினாடிக்கு ஒரு அமானுஷ்ய காணொளி பதிவிடப்பட்டது. அதில் ஒரு வெள்ளை தோற்றம் கொண்ட நெளிந்த மனிதன் போன்ற உருவம், குனிந்த நிலையில் மெதுவாகச் சுற்றிச் சுற்றிப் பார்த்து நகர்வது தெரிகிறது.
இணையத்தில் வெளியிடப்பட்ட இந்த வினோத காணொளி கடத்த 9 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள கென்டுக்கி என்னும் இடத்தில் வீட்டின் பின்புறத் தோட்டத்தில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையத்தில் இந்த காணொளி சம்பந்தமாகப் பெருமளவு கேள்விகள் எழுப்பப்பட்டு உலகளவில் அமானுஷ்ய விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. அதற்கு மிகப் பெரிய காரணமாக அமைத்தது ஸ்பெக்ட்ரல் (Spectral) என்னும் ஆங்கில திரைப்படம். ஸ்பெக்ட்ரல் திரைப்படத்தில் இதே போன்ற ஒரு மனித வடிவிலான உருவம் அழிவை ஏற்படுத்தும். அதனை வைத்து இந்த உருவத்தை அமானுஷ்யமாகப் பார்க்கின்றனர் ஆவிகள் மீது ஆர்வம் கொண்டோர் சிலர்.
— Paranormality Magazine (@ParanormalityM) July 9, 2022
உலகளவில் அமானுஷ்ய விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களது கருத்துக்களை இந்த காணொளி குறித்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த காணொளியில் தெரியும் உருவம் என்னவாக இருக்கும், இந்த காணொளி உண்மைதானா போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Saravana Siddharth
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.