Home /News /trend /

சிசிடிவியில் சிக்கிய மர்ம உருவம்; அதிர்ச்சியூட்டும் திகில் வீடியோ.!

சிசிடிவியில் சிக்கிய மர்ம உருவம்; அதிர்ச்சியூட்டும் திகில் வீடியோ.!

Trending

Trending

Viral Video | வெளிறிய நிற உருவம் ஒன்று சிசிடிவியில் சிக்கிய வீடியோ சோசியல் மீடியாவையே மிரள வைத்துள்ளது.

பூமியில் பேய், பூசாசு போன்ற அமானுஷ்ய சக்திகள் இருப்பது உண்மையா என்ற விவாதம் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதனை மெய்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சில தொழில்நுட்பத்தில் உள்ள போட்டோ மற்றும் வீடியோ ட்ரிக்ஸ்களை பயன்படுத்தி மர்மமான உருவம் நடமாடுவது போன்றும், போட்டோக்களுக்கு பின்புறம் நின்று கொண்டிருப்பது போலவும் காட்சியப்படுத்துகின்றனர். இதனை உண்மையென நம்பி பலரும் சோசியல் மீடியாவில் அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துவது உண்டு.

சில சமயங்களில் ஏதார்த்தமாக பதிவான ஒரு சில வீடியோக்களில் அதிர்ச்சியூட்டும் படியான காட்சிகள் பதிவாவது உண்டு. தற்போது அப்படியொரு சிசிடிவியில் பதிவான காட்சி தான் சோசியல் மீடியாவை மிரள வைத்துள்ளது. அமெரிக்காவில் ஒரு வீட்டின் அருகே வெளிறிய மர்ம உருவம் இருப்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி, பாரநார்மலிட்டி மேகசின் என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

கென்டக்கியில் உள்ள மோர்ஹெட் அருகேயுள்ள வீடு ஒன்றின் வெளியே பொருத்தப்பட்டுள்ள சிசிவிடிவியில் பதிவாகியுள்ள அந்த வீடியோவில், வெளிறிய உருவம் ஒன்று மெதுவாக குனிந்தபடியே அசைந்து, அசைந்து நடந்து வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. 33-வினாடிகள் பதிவாகியுள்ள வீடியோவில் வெளிர், மனிதனைப் போன்ற உருவம், ஒரு வீட்டின் பின் தோட்டத்திற்கு அருகில் நெளிவாகவும் குனிந்த நிலையிலும் தோன்றுகிறது. வீட்டு உரிமையாளரின் காரை நெருங்கும் போது அது கவனமாக முன்னே நகர்ந்து சுற்றி பார்க்கிறது.இந்த வைரல் வீடியோ சோசியல் மீடியாவில் அமானுஷ்யம் பற்றிய விவாதத்தை தூண்டியுள்ளது. ஸ்பெக்ட்ரல் திரைப்படத்தில் பேரழிவை ஏற்படுத்திய மனித உருவங்களைப் போன்ற உருவம் வீடியோவில் பதிவாகியுள்ளது, காண்போரை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. ஜூலை 9 அன்று "KY, Moorhead என்ற பகுதியில் பாதுகாப்பு கேமராவில் சிக்கிய வெளிர் உயிரினத்தின் வீடியோ இதோ" என்ற தலைப்புடன் பகிரப்பட்ட அந்த வீடியோவை இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கண்டுள்ளனர்.

Also Read : கடலில் திமிங்கலம் பிரசிவிக்கும் அரிய காட்சி.. லைக்ஸ்களை அள்ளிய நிகழ்வு

"எனக்கு உள்ள கேள்வி என்னவென்றால், இது அகச்சிவப்பு நிறமா? ஏனெனில் வெளிறிய உயிரினம் உண்மையில் அடர் நிறத்தில் இருக்கும் (கருப்பு உடையில் இருக்கும்). ஆனால் இந்த உருவம் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. இது உங்கள் வீடியோ அல்ல என்று எனக்கு தெரியும், ஆனால் அது போன்ற விஷயங்கள் நிறைய வெளிப்படுத்த முடியும்” என ட்விட்டர் யூஸர் ஒருவர் தெரிவித்துள்ளார்."இது ஒரு பாதுகாப்பு கேமராவுடன் எடுக்கப்பட்டிருந்தால், யாரோ கையில் வைத்திருப்பது போல் கேமரா ஏன் நகர்கிறது?. பாதுகாப்பு கேமராவை எங்காவது பதித்து தான் வைத்திருப்பார்கள். மிதக்கவாவிட்டிருப்பார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read : கொட்டும் அருவி மீண்டும் முகடுக்கே பறக்கும் அரிய இயற்கை காட்சி! - வீடியோ

அமானுஷ்ய ஆராய்ச்சித் துறையில் பணிபுரிவதாக கூறும் உள்ளூர் நிறுவனம் ஒன்று அளித்துள்ள பதிலில் "கேமரா ஏன் நகர்கிறது என்பதற்கு பதில் என்னவென்றால், மானிட்டரின் கண்ணாடியில் ஒரு நபரின் தொலைபேசியிலிருந்து இந்த காட்சிகளை பதிவு செய்வதால் காட்சிகள் நகர்கிறது. அந்த கண்ணாடியில் நபரின் பிரதிபலிப்பை காணலாம். அது என்ன, ஒரு பதிவு அல்லது பதிவு அசல் காட்சிகளின் தரத்தை குறைக்கிறது” என விளக்கம் அளித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: CCTV Footage, Trending, Viral Video

அடுத்த செய்தி