Home /News /trend /

பாகிஸ்தானில் பறக்கும் தட்டு? மர்ம பொருள் பற்றிய வீடியோவால் பரபரப்பு!

பாகிஸ்தானில் பறக்கும் தட்டு? மர்ம பொருள் பற்றிய வீடியோவால் பரபரப்பு!

பாகிஸ்தானில் பறக்கும் தட்டு?

பாகிஸ்தானில் பறக்கும் தட்டு?

பாகிஸ்தானில் வானில் அடையாளம் தெரியாத பொருள் பறந்து கொண்டிருப்பது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வானியல் அற்புதங்கள் பலவற்றை பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். வானில் நமது கண்களுக்கே புலப்படாத வண்ணம் தினந்தோறும் பல அற்புதங்கள் அரங்கேறி வருகின்றன. அதில் யு.எஃப்.ஓ எனப்படும் பறக்கும் தட்டுக்கள் பற்றிய ஆச்சர்ய நிகழ்வுகள் பல இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது. தற்போது நமது அண்டை நாடான பாகிஸ்தானில் நடந்துள்ள மர்மமான நிகழ்வு குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

பாகிஸ்தானில் பட்டப்பகலில் ஒரு நகரத்திற்கு மேல் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் காட்சிகள் வானியல் நிபுணர்களையும் அதிகாரிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள DHA 1 மாவட்டத்தில் நல்ல பகல் வேளையில் அர்ஸ்லான் வார்ரைச் என்ற நபர் மர்மமான பொருள் ஒன்று வானில் மிதந்து கொண்டிருப்பதை கண்டுள்ளார். சுமார் 2 மணி நேரமாக அந்த காட்சியை பார்த்த அர்ஸ்லான் வார்ரைச், முக்கோண வடிவிலான பறக்கும் தட்டு போன்ற அந்த மர்ம பொருளை வீடியோவாக பதிவு செய்து சோசியல் மீடியாவில் பதிவேற்றியுள்ளார்.

சுமார் 13 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் முக்கோண வடிவத்திலான பறக்கும் தட்டு இஸ்லமாபாத் நகரின் மீது மையமிட்டிருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த காட்சி தற்போது வானியல் ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து அர்ஸ்லான் வார்ரைச் கூறுகையில் "அது என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. கருப்பு நிற வட்டப்பாறைப் போல் காட்சியளித்த அந்த பொருளை வெறும் கண்ணாலேயே நன்றாக பார்க்க முடிந்தது. அதனை நான் பெரிதாக்கும்போது, ​​அது தோராயமாக ஒரு முக்கோணத்தின் வடிவத்தில் இருப்பதைப் பார்த்தேன், பின்புறம் சற்றே பருத்த தோற்றத்தில் இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

Also read... பாலத்துக்கு இடையில் மாட்டிக்கொண்ட வாகனம்: உயிர்தப்பிய டிரைவர் – வைரல் வீடியோ

மேலும் தான் இந்த காட்சிகளை படமெடுக்கும் போது பறவைகள் பறந்து சென்ற காட்சிகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், தனக்கு ட்ரோன்களைப் பற்றி நன்றாக தெரியும் என்பதால், இது வணிக ரீதியிலான ட்ரோன் கிடையாது என்றும் அடித்துக்கூறியுள்ளார். பெரும்பாலான ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள் வசிக்கும் இஸ்லாமாபாத் பகுதியில் இப்படியொரு சம்பவம் அரங்கேறியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. வானில் பறந்து கொண்டிருந்த மர்ம பொருள் பற்றிய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.



இதேபோன்ற நிகழ்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் லாகூரிலும் நடந்துள்ளது. முல்தான் - சாஹிவால் இடையிலான விமான பயணத்தின் போது சுமார் 10 ஆயிரம் அடிக்கு மேல் விமானி ஒருவர் பறக்கும் தட்டு போன்ற ஒன்றை படம் பிடித்திருந்தார். அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் சூரிய ஒளிக்கு மத்தியிலும் மிகவும் பிரகாசமானதாக தோன்றுவது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி இதேபோல் பல சந்தேகங்களை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Trending Videos

அடுத்த செய்தி