Home /News /trend /

இந்தியாவில் தோன்றிய ஏலியன்? வானில் திடீரென தென்பட்ட ரயில்..வியப்பில் மக்கள்!

இந்தியாவில் தோன்றிய ஏலியன்? வானில் திடீரென தென்பட்ட ரயில்..வியப்பில் மக்கள்!

மர்மமான ஓடும் ரயில் போன்ற வெளிச்சம்

மர்மமான ஓடும் ரயில் போன்ற வெளிச்சம்

Moving light in sky : உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இரவில் திடீரென ரயில் ஓடுவது போன்று ஒரு தோற்றம் நடுவானில் தோன்றி பலபேரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India
    ந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் திடீரென தோன்றிய மர்மமான ஓடும் ரயில் போன்ற வெளிச்சம், விளக்குகள் அணியெடுத்து நகர்வது போன்று தோன்றியது. அந்த காட்சியை மக்கள் வியப்புடன் பார்த்து வீடியோ மற்றும் புகைப்படங்களாக இணையத்தில் பதிவு செய்கின்றனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இரவில் திடீரென ரயில் ஓடுவது போன்று ஒரு தோற்றம் நடுவானில் தோன்றி பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த நகரும் ஒளி, லக்னோ, கான்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்பட்டது. இதற்கான காரணம் தெரியாத நிலையில் பலர் அவர்களின் கற்பனைக்கு ஏற்ற பெயர்களைக் கொடுத்து வருகின்றனர். அதில் அதிகம் கூறப்பட்டது நகரும் ரயில் என்பது தான்.



    இந்த மர்மமான நகரும் வெளிச்சம் ஷ்ரவஸ்தி, ஹர்தோய், லக்னோ, கான்பூர், கன்னோஜ் மற்றும் மலிஹாபாத் இடங்களில் தென்பட்டதாக அந்த பகுதி இணைய வாசிகள் புகைப்படம் மற்றும் காணொளிகளுடன் பதிவிட்டுள்ளனர்.



    இது ஏலியனின் செயலாக இருக்குமோ என்ற சந்தேகமும் பலரிடம் ஏற்பட்டுள்ளது. ஆங்கில திரைப்படங்களில் தோன்றுவது போன்றும், ஹாரி பாட்டர் திரைப்படத்தில் வரும் வானில் பறக்கும் ரயில் போன்றும் இந்த காட்சி உள்ளது.

    மர்மமான நகரும் வெளிச்சத்திற்குக் காரணம்:

    இது ஏலியனும் இல்லை மர்மமான வானில் பறக்கும் ரயிலும் இல்லை என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அது ஸ்டார்லிங்க்-51 செயற்கைக்கோள் ரயில் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் ஸ் (Space X) நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் இணையச் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளனர்.

    Also Read : 9 வினாடிகளில் ஆந்தை கூட்டத்திற்கு மத்தியில் இருக்கும் பூனையை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!

    SpaceX Falcon 9 ராக்கெட் 51 ஸ்டார்லிங்க் இணையச் செயற்கைக்கோள்களைக் கொண்டு புளோரிடா பகுதியிலிருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அந்த வெளிச்சமே உத்தரப்பிரதேசத்தில் வானில் தோன்றி நகரும் வெளிச்சம் என்று கூறப்பட்டுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Alien, Train, Uttar pradesh

    அடுத்த செய்தி