• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ’குட்டி தேவதையின் கியூட் ஸ்மைல்’ - அப்பா ஓட்டிய பிளைட்டில் உற்சாக பயணம்!

’குட்டி தேவதையின் கியூட் ஸ்மைல்’ - அப்பா ஓட்டிய பிளைட்டில் உற்சாக பயணம்!

அப்பா ஓட்டிய பிளைட்டில் உற்சாக பயணம்

அப்பா ஓட்டிய பிளைட்டில் உற்சாக பயணம்

சிறுமி ஷனயா மோதிஹாரின் அழகான இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • Share this:
அப்பா ஓட்டிய பிளைட்டில் முதன்முறையாக விமானப் பயணம் மேற்கொண்ட சிறுமியின் வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகியுள்ளது.

சிறுமி ஒருவர் தனது தாயுடன் முதன்முறையாக விமானப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த விமானப் பயணத்தின் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த விமானத்தை இயக்குவதே அந்த சிறுமியின் தந்தை தான். அதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்த அந்த சிறுமி, பிளைட்டில் தன் இருக்கையில் அமர்ந்துவாறு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். மேலும், பைலட்டாக இருக்கும் தனது தந்தையை பிளைட்டிற்குள் பார்த்தவுடன், செம ஜாலியாக இருக்கும் அந்த சிறுமி, அப்பா.. அப்பா.. என மகிழ்ச்சியில் அழைக்கிறார்.

சிறுமியின் முன்பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் தந்தை, தன்னுடைய குழந்தைக்கு மகிழ்ச்சியாக டாட்டா கொடுக்கிறார். இந்த அற்புதமான நொடிகள் அனைத்தையும் சிறுமியின் தாயார் முழுவதுமாக வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த குட்டி சிறுமியின் பெயர் ஷனயா மோதிஹார். அவருடைய தந்தை தான் விமான ஓட்டியாக இருக்கிறார்.

இதுவரை விமான பயணம் மேற்கொள்ளாத அந்த சிறுமி, முதன்முறையாக தனது தந்தை இயக்கிய விமானத்தில் டெல்லி வரை பயணித்துள்ளார். மிகுந்த மகிழ்ச்சியுடன் மேற்கொண்ட அந்தப் பயணம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் எழுதியுள்ளார். அதில், அப்பாவுடன் எனது முதல் விமானப் பயணம் இது. அவர் என்னை டெல்லிக்கு அழைத்துச் சென்றார். விமானத்தில் அவரை பைலட்டாக பார்த்தது மிகவும் மிகழ்ச்சியான தருணமாக இருந்தது என எழுதியுள்ளார். அந்த சிறுமியின் இன்ஸ்டாகிராம் பக்கமாக இருந்தாலும், குழந்தையின் உணர்ச்சிகளை அவரது தாய் பிரியங்கா மனோகத் எழுதியுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Shanaya Motihar (@shanaya_motihar)






சிறுமி ஷனயா மோதிஹாரின் அழகான இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோ இதுவரை சுமார் 1.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அவரின் சிரிப்பு, அப்பாவை கூப்பிடும் அழகு என அனைத்தும் ரசிக்கும் வகையில் இருப்பதால், நெட்டிசன்கள் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் எழுதியுள்ள கமெண்டில், சிறுமியின் இந்த சிரிப்பு விலைமதிப்பற்றது எனத் தெரிவித்துள்ளார். மற்றொருவர், செம கியூட்டான வீடியோ, மீண்டும் மீண்டும் லூப் போட்டு வீடியோவைப் பார்த்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

சிறுமி ஷனயா, உண்மையிலேயே பாக்கியமானவள், இதுபோன்ற மகிழ்ச்சியான தருணங்கள் எல்லோருக்கும் கிடைக்காது, அவளுக்கு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. இதுபோல் இன்னும் பல மகிழ்ச்சியான தருணங்கள் அமையட்டும் என இன்னொரு நெட்டிசன் கூறியுள்ளார்.

Also read... ஹாஸ்பிடல் பெட்டில் நின்று சிறு குழந்தை செய்த செயல் - நெட்டிசன்களை உற்சாகப்படுத்தும் வைரல் வீடியோ!

சிறுமியின் விமானப் பயணம் குறித்து அவரது தாய் எழுதியுள்ள பதிவில், நீண்ட நாட்களாக மகளை விமானப் பயணம் அழைத்துச் செல்ல வேண்டும் என விரும்பினோம். ஆனால் அதற்கான நேரம் அமையவில்லை. கொரோனா காரணமாக பிளான் தள்ளிப்போனது. சரியான நேரம் அமைந்ததால் இப்போது டெல்லி வரை உற்சாகமாக பயணம் மேற்கொண்டோம், கணவர் இயக்கிய பிளைட்டில் சென்றது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: