• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ஆதரவற்ற இந்து பெண்ணை வளர்த்து, வேத முறைப்படி இந்து மாப்பிள்ளைக்கே திருமணம் செய்து வைத்த இஸ்லாமியர்!

ஆதரவற்ற இந்து பெண்ணை வளர்த்து, வேத முறைப்படி இந்து மாப்பிள்ளைக்கே திருமணம் செய்து வைத்த இஸ்லாமியர்!

ஆதரவற்ற இந்து பெண்ணை வளர்த்து இந்து மாப்பிள்ளைக்கே திருமணம் செய்து வைத்த இஸ்லாமியர்

ஆதரவற்ற இந்து பெண்ணை வளர்த்து இந்து மாப்பிள்ளைக்கே திருமணம் செய்து வைத்த இஸ்லாமியர்

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட 18 வயது இந்து பெண்ணான பூஜா வடிகேரியின் கார்டியன் இஸ்லாமியரான மெஹ்பூப் மஸ்லி.

  • Share this:
ஜாதி மற்றும் மத வேறுபாடுகளை கடந்து நடக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் நம்மை நெகிழ செய்து விடும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடைபெற்றுள்ளது. ஆதரவு யாருமின்றி இருந்த அனாதை பெண்ணுக்கு பல ஆண்டுகளாக பாதுகாவலராக இருந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதில் பெரிய நெகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் என்னவென்றால் பெற்றோர் மற்றும் உறவினர் யாருமின்றி தவித்த அந்த பெண்ணுக்கு கார்டியனாக இருந்த வளர்த்தவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். அவரிடம் வளர்ந்த அந்த பெண் இந்து மதத்தை சிறந்தவர்.

சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பெண்ணை கவனித்து கொண்ட அந்த இஸ்லாமியர், இறுதியாக அந்த பெண்ணிற்கு வேத மந்திரங்கள் முழங்க ஒரு இந்து மாப்பிளைக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். பல ஆண்டுகளாக தன்னால் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு இந்து பெண்ணுக்கு, தனது மத முறைப்படி திருமணம் செய்து வைக்காமல் அந்த பெண்ணின் மத முறைப்படியே திருமணம் செய்து வைத்துள்ள அந்த இஸ்லாமியர் மற்றும் அந்த பெண்ணின் திருமண நிகழ்வுகள் தற்போது சோஷியல் மீடியாவில் தொடர்ந்து வைரலாகி நெட்டிசன்களை நெகிழ்ச்சி அடைய செய்து வருகிறது. இந்த திருமணம் கடந்த வாரம் ஜூலை 31 அன்று கர்நாடகாவின் விஜயபுரா பகுதியில் இனிதே நடைபெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட 18 வயது இந்து பெண்ணான பூஜா வடிகேரியின் கார்டியன் இஸ்லாமியரான மெஹ்பூப் மஸ்லி (Mehboob Masli). இவர் கடந்த வெள்ளிக்கிழமை இந்து பழக்கவழக்கங்களின் படி ஒரு இந்து பையனுடன் பூஜாவிற்கு திருமணத்தை நடத்தி வைத்து உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 8 வயது சிறுமியாக இருந்த பூஜா ஆதரவு யாருமற்று நிர்கதியாக இருந்தாள். அவளுடைய சொந்த உறவினர்களே சிறுமி பூஜாவிற்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்க மறுத்தனர். ஏற்கனவே 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் என 4 குழந்தைகளுக்கு தந்தை என்றாலும் பூஜாவை தனது வீட்டிற்கு அளித்து சென்று வளர்க்க அப்போது மெஹ்பூப் மஸ்லி முடிவெடுத்தார்.

இதனை தொடர்ந்து மெஹ்பூப் மஸ்லி கார்டியனாகவும், ஒரு தந்தைக்கு தந்தையாகவும் இருந்து பூஜாவை கவனித்து வளர்த்து வந்தார். இதனிடையே ஒரு இந்து ஆணுக்கு தனது வளர்ப்பு மகளான பூஜாவை திருமணம் செய்து கொடுத்துள்ளது பற்றி கூறியுள்ள மெஹ்பூப், பூஜா சார்ந்த மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தான் அவளை திருமணம் செய்து வைக்க வேண்டும் அது என் பொறுப்பு என்பதை உணர்ந்திருந்தேன். தவிர பூஜா எங்கள் வீட்டில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்த போதும் கூட, நான் அவளை எங்கள் மதத்தை (இஸ்லாம்) பின்பற்றவோ அல்லது ஒரு முஸ்லிம்நபரை தான் திருமணம் செய்ய வேண்டும் என்றோ கட்டாயப்படுத்தவில்லை.

Also read... "சமைப்பதற்காக பிறக்கவில்லை" - இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியை!

ஏனென்றால் அப்படி செய்வது எங்கள் மதத்தின் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். வரதட்சணை எதுவும் கேட்காமல் மணமகனின் பெற்றோர் பூஜாவை மகிழ்ச்சியுடன் தங்கள் வீட்டு மருமகளாக ஏற்று கொண்டதாகவும் மெஹ்பூப் மஸ்லி மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார். பல்வேறு சமூகங்கள் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ மக்களை மெஹ்பூப் வலியுறுத்தி உள்ளார். தனது வீட்டில் வளர்ந்த இந்து பெண்ணுக்கு, இந்து பையனையே மணமுடித்துள்ள மஸ்லி, பல சமூக சேவைகள் மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை நடத்துவதற்காக ஏற்கனவே பிரபலமாக உள்ளவர் ஆவார்.

சில இந்துமத நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தும் தனது மத நல்லிணக்க உணர்வை பலமுறை வெளிப்படுத்தி உள்ளவர் இந்த மெஹ்பூப். தன்னை வளர்த்த விதம் மற்றும் தற்போது அமைந்துள்ள திருமண வாழ்க்கை பற்றி குறிப்பிட்டுள்ள புது பெண்ணான பூஜா, " சிறந்த இதயத்துடன் கூடிய பெற்றோர்களை பெற்று நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக இருக்கிறேன் என்பதில் அளவிட முடியாத மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: