வித்தியாசமான மியூசிக்கல் சேர் போட்டி... கடைசியில்தான் ட்விஸ்ட்...! வைரல் வீடியோ

இணையவாசிகள் இதை மியூசிகல் சேரின் அடுத்த வர்ஷன் எனக் கிண்டலடித்து வருகின்றனர்.

வித்தியாசமான மியூசிக்கல் சேர் போட்டி... கடைசியில்தான் ட்விஸ்ட்...! வைரல் வீடியோ
மியூசிகல் சேர்
  • News18
  • Last Updated: November 16, 2019, 3:49 PM IST
  • Share this:
திருமண வீடு என்றாலே கலகலப்பிற்கு பஞ்சமிருக்காது. இருப்பினும் சிரிப்பு சத்தத்தை இன்னும் அதிகரிக்க இளைஞர் பட்டாளம் ஏதாவதொரு விளையாட்டை விளையாட வைத்து சொந்தங்களை ஒன்றிணைக்க வைக்கும். அதில் ஒன்றுதான் மியூசிகல் சேர்.

பள்ளிகளில் அதிகமாக விளையாடியிருப்போம். அதற்கு அடுத்ததாக திருமணங்களில்தான் விளையாடியிருக்கக் கூடும். ஆனால் இந்தத் திருமணத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று மியூசிகல் சேர் விளையாட்டை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இணையவாசிகள் இதை மியூசிகல் சேரின் அடுத்த வர்ஷன் எனக் கிண்டலடித்து வருகின்றனர். அதோடு இதை தங்கள் திருமணங்களில் செய்ய வேண்டும் என்றும் ..உங்கள் திருமணத்தில் இந்த விளையாட்டை வெச்சிடலாமா என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


அப்படி என்ன விளையாட்டு ?அதாவது வரிசையான நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கிருக்கும் ஆண்கள் ஒவ்வொரு நாற்காலியாக ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து பெண்ணை அமர வைக்க வேண்டும். அப்படி எவ்வளவு தூரம் நாற்காலியை உயர்த்தி அமர வைக்கின்றனர் என்பதுதான் போட்டி. அதில் ஒருவர் குறிப்பிட்ட தூரம் வரை பெண்ணை அமர வைக்கிறார். ஒரு கட்டத்தில் முடியாமல் பொத்தென கீழே போட்டு விடுகிறார். இது அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
First published: November 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்