ஆஸ்திரேலிய வீராங்கனையை இரவு உணவுக்கு அழைத்து செல்ல விரும்பும் முரளி விஜய்

ஷிகார் தவான் உடன் எப்போது வேண்டுமானாலும் டின்னர் செல்ல தயார். அவர் வேடிக்கையான மனிதர்.

ஆஸ்திரேலிய வீராங்கனையை இரவு உணவுக்கு அழைத்து செல்ல விரும்பும் முரளி விஜய்
  • Share this:
முரளி விஜய்யிடம் எடுக்கப்பட்ட கலகலப்பான பேட்டியை சி.எஸ்.கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் தொடரில் பிசியாக இருக்க வேண்டிய வீரர்கள் ஊரடங்கு காரணமாக சமூகவலை தளங்களில் பிசியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் முரளி விஜய்யிடம் ரசிகர்கள் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகள் அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு முரளி விஜய் கலகலப்பான பதில்களை அளித்தார். அந்த பேட்டியின் போது டின்னருக்கு நீங்கள் யாரை செல்ல விருப்பம் என்று கேட்கப்பட்டது.


அதற்கு பதிலளித்த முரளி விஜய், “ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ் பெரியை டின்னர் அழைத்து செல்ல விரும்புவதாக தெரிவித்தார. அவர் மிகவும் அழகானவர் என்றும் கலகலப்பாக பேசினார்.ஷிகார் தவான் உடன் எப்போது வேண்டுமானாலும் டின்னர் செல்ல தயார். அவர் வேடிக்கையான மனிதர். அவர் இந்தியில் பேசுவார் நான் பதிலுக்கு தமிழில் பேசுவேன்“ என்று நகைச்சுவையாக கூறினார்.

2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோனியுடன் பார்ட்னர்ஷிப் வைத்து விளையாடியதையும் நினைவு கூர்ந்தார்.First published: April 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading