Home /News /trend /

ஆன்லைனில் Wine ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி - ரூ.4.8 லட்சம் மோசடி!

ஆன்லைனில் Wine ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி - ரூ.4.8 லட்சம் மோசடி!

Wine

Wine

Online Fraud | கடையின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசியபோது, மறுமுனையில் பேசிய நபர், தங்கள் கடையில் “கேஷ் ஆன் டெலிவரி’’ வசதி கிடையாது என்று கூறியதுடன் கூகுள் பே மூலமாக பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அந்தப் பெண் ரூ.650 அனுப்பி வைத்தார்.

மேலும் படிக்கவும் ...
ஆன்லைன் மூலமாக பொருள்களை வாங்கும்போது அல்லது சேவைகளை பெறும்போது நாம் கவனமாக இல்லை என்றால் நமது பணத்திற்கு உத்தரவாதம் கிடையாது. டிஜிட்டல் பரிவர்த்தனை நடவடிக்கைகளையும் நாம் பாதுகாப்பாக கையாளுவது அவசியம். கொஞ்சம் அசந்தாலும் மோசடியாளர்கள் நம் பணத்தை திருடி விடுவார்கள். அப்படியொரு சம்பவம் தற்போது மும்பையில் நிகழ்ந்துள்ளது.

மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர், அவரது கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்தப் பெண்ணின் சகோதரி கடந்த 4ஆம் தேதி இவர்களது வீட்டுக்கு வந்திருக்கிறார். இதைத்தொடர்ந்து வொயின் வாங்கி செலிபரேட் செய்யலாம் என முடிவு செய்த அந்தப் பெண், கூகுளில் “என் அருகே உள்ள வொயின் ஷாப்கள்’’ என தேடினார்.

அப்போது, காட்டப்பட்ட முடிவுகளில், போவை பகுதியில் ஓம் சாய் பீர் ஷாப் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடையின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசியபோது, மறுமுனையில் பேசிய நபர், தங்கள் கடையில் “கேஷ் ஆன் டெலிவரி’’ வசதி கிடையாது என்று கூறியதுடன் கூகுள் பே மூலமாக பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அந்தப் பெண் ரூ.650 அனுப்பி வைத்தார்.

மாதிரி படம்


லாவகமாக மோசடி அரங்கேற்றம் :

Wine ஆர்டர் செய்த பெண்ணை மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர், “நீங்கள் ரூ.30 அதிகமாக அனுப்பியுள்ளீர்கள். அதை திரும்ப பெற நாங்கள் அனுப்பும் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்யுங்கள்’’ என கூறி க்யூஆர் கோடு அனுப்பி வைத்தார். அதை அந்தப் பெண் ஸ்கேன் செய்ததும், அவரது அகவுண்டில் இருந்து ரூ.19,991 டெபிட் ஆனது.

Also Read : டிஜிட்டல் மோசடி - பாதுகாப்பாக இருப்பது எப்படி.? டிப்ஸ்.!

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அந்த மோசடியாளரை தொடர்பு கொண்டார். அப்போது, இது தவறுதலாக நடந்து விட்டதாகக் கூறி மற்றொரு க்யூஆர் கோடு ஒன்றை அவர் அனுப்பி வைத்தார். அதை ஸ்கேன் செய்தபோது ரூ.96,108 தொகை அக்கவுண்டில் இருந்து டெபிட் ஆனது. இதேபோன்று அடுத்தடுத்த க்யூஆர் கோடுகளை அனுப்பி வைத்து அந்த நபர் ரூ.4.80 லட்சம் பணத்தை திருடிவிட்டார். தற்போது, ஏமாற்றப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read : ஆன்லைன் ஹேக்கர்கள் எந்தெந்த வழிகளில் உங்கள் பணத்தை திருடக்கூடும் - ஆர்பிஐ எச்சரிக்கை

மோசடிகள் புதிதல்ல :

ஆன்லைனில் மோசடியாளர்களிடம் மக்கள் ஏமாறுவது புதிதல்ல. கடந்த ஆண்டு மும்பையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் ஆன்லைனில் ரூ.400 மதிப்புமிக்க பிறந்தநாள் கேக் ஒன்றை ஆர்டர் செய்தார். அப்போது, பேக்கரி ஊழியர் போல பேசி, அவரிடம் ரூ.53,000 தொகையை மோசடியாளர் திருடி விட்டார். தோழியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ஆன்லைனில் ரூ.400 செலுத்தி அவர் கேக் முன்பதிவு செய்தார். கூகுளில் குறிப்பிடப்பட்டிருந்த கடையின் தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு டாக்டர் பேசியபோது முதலில் ரூ.15,236 தொகையும், பின்னர் ரூ.38,472 தொகையும் அவரது அக்கவுண்டில் இருந்து திருடப்பட்டது.
Published by:Selvi M
First published:

Tags: Online Frauds, Trending

அடுத்த செய்தி