Home /News /trend /

மும்பையில் காணாமல் போன பெண் 20 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு!

மும்பையில் காணாமல் போன பெண் 20 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு!

மும்பையில் காணாமல் போன பெண் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு!

மும்பையில் காணாமல் போன பெண் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு!

பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி அழைத்துச் சென்ற நபர், அவரை ஏமாற்றிவிட்டு துபாய்க்கு பதிலாக பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்டதாக தெரிகிறது.

    மும்பையில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பாக வெளிநாடு செல்வதாகக் கூறி கிளம்பிச் சென்ற பெண் காணாமல் போய்விட்டார். இந்நிலையில், அந்த பெண் பாகிஸ்தானில் வசிப்பது சமூக வலைதளங்கள் மூலமாக கண்டறியப்பட்டு தற்போது கண்டறியப்பட்டுள்ளார்.

    முன்னதாக, மகாராஷ்டிர மாநிலம், மும்பை அருகாமையில் உள்ள குர்லா என்ற புறநகர் பகுதியைச் சேர்ந்த ஹமீதா பானு என்ற பெண் கடந்த 2002ஆம் ஆண்டு, துபாயில் வீட்டு பணிப்பெண் வேலை கிடைத்திருப்பதாகக் கூறி வீட்டை விட்டு புறப்பட்டு சென்றார். ஆனால், அந்தப் பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி அழைத்துச் சென்ற நபர், அவரை ஏமாற்றிவிட்டு துபாய்க்கு பதிலாக பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்டதாக தெரிகிறது.

    காணாமல் போனபோது ஹமீதா பானுவுக்கு 50 வயது ஆகும். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் அந்தப் பெண் வாழ்ந்து வந்துள்ளார். அங்குள்ள நபருடன் ஹமீதா பானு திருமணம் செய்து கொண்டு, குழந்தையும் பெற்றுக் கொண்டார். இந்த சூழலில், அந்த நபர் இறந்துவிட்டார்.

    இதற்கிடையே, மீண்டும் இந்தியாவுக்கு திரும்பிச் சென்று தன்னுடைய குடும்பத்தினருடன் இணைய வேண்டும் என்று ஹமீதா பானு விரும்பினார். இதை தொடர்ந்து பாகிஸ்தானை சேர்ந்த சமூக நல ஆர்வலர் வலியுல்லா மரூஃப் என்பவரை சந்தித்து, 20 ஆண்டுகளுக்கு முன்பாக தன்னை ஏமாற்றிய ஏஜெண்ட் துபாய்க்கு பதிலாக பாகிஸ்தானில் இறக்கி விட்டது குறித்து கூறியுள்ளார்.

    Also Read : ஒன்றல்ல, இரண்டல்ல... வயிற்று வலி என வந்த நபருக்கு ஸ்கேனில் தெரிந்த அதிர்ச்சி ரிப்போர்ட்

    இதை கேட்ட மரூஃப், அந்தப் பெண் பேசுவதை வீடியோவாகப் பதிவு செய்து, யூடியூப் வலைதளத்தில் அப்லோடு செய்தார். மும்பையில் இருந்து யாரேனும் சமூக ஆர்வலர் இந்த வீடியோவை பார்த்தால், அவர் மூலமாக உதவி கிடைக்கும் என்று மரூஃப் நம்பிக்கை கொண்டிருந்தார்.

    நினைத்ததைப் போலவே, மும்பையைச் சேர்ந்த காஃப்ளான் சாயிக் என்பவர் அந்த வீடியோவை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களி பார்வேர்டு செய்தார். இந்நிலையில், குர்லா பகுதிக்கு அருகே கசைவாதா என்ற இடத்தில் வசிக்கும், ஹமீதா பானுவின் மகள் யாஸ்மின் பஷீர் ஷேக்கிற்கு இந்த விஷயம் தெரியவந்தது.

    இதுகுறித்து யாஸ்மின் கூறுகையில், “கடந்த 2002ஆம் ஆண்டில் துபாயில் வேலை செய்வதற்காக ஒரு ஏஜெண்ட் மூலமாக எனது தாயார் புறப்பட்டுச் சென்றார். ஆனால், அவர் பாகிஸ்தானில் இறக்கி விட்டதாக தெரிகிறது. அதே சமயம், எங்கள் தாயாரை நாங்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    தற்போது எங்கள் அம்மா பாகிஸ்தானில் வசிப்பது தெரியவந்துள்ளது. அவரை இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வருவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்’’ என்றார் அவர்.இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை அணுகி, ஹமீதா பானுவை அழைத்து வர, அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி