திருமண ஆசைக்காட்டி முதியவரை ஏமாற்றிய பெண் - ரூ.1 கோடி சுருடிக்கொண்டு தலைமறைவு!

திருமண ஆசைக்காட்டி முதியவரை ஏமாற்றிய பெண் - ரூ.1 கோடி சுருடிக்கொண்டு தலைமறைவு!

கோப்புப் படம்

திருமண ஆசைவார்த்தை கூறி தன்னை ஏமாற்றிய ஷாலினி சிங் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஏமாற்றிச் சென்ற ரூ.1.3 கோடி பணத்தை பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மும்பையில் திருமண ஆசைக்காட்டி முதியவரிடம் 1.3 கோடி ரூபாய் ஏமாற்றி பறித்துச் சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஜெரோன் டி சவுசா (Jeron D’Souza) என்ற முதியவர் மல்வானி பகுதியில் வசித்து வருகிறார். மும்பை உள்ளூர் விமான நிலையம் அமைந்துள்ள சான்டாகிரஷ் பகுதியில் அவருடைய தந்தை வாங்கி வைத்த நிலம் ஒன்றை கடந்த 2010 ஆண்டு விற்பனை செய்த ஜெரோன், நிதி நிறுவனம் ஒன்றில் 4 முதலீட்டு திட்டங்களில் அந்த பணத்தை முதலீடு செய்துள்ளார். அந்த வங்கிக்கு சென்று வரும்போது அங்கு பணிபுரிந்த சாலினி சிங் என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில், ஒரு கட்டத்தில் ஜெரோனை திருமணம் செய்து கொள்வதாகவும், கடைசி காலத்தில் உடனிருந்து பார்த்துக் கொள்வதாகவும் அந்த பெண் உறுதியளித்துள்ளார்.

ஷாலினி கூறியதில் நெகிழ்ந்துபோன ஜெரோனும் அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, ஷாலினியும், ஜெரோனும் பார்க், ரெஸ்டாரண்ட் என இன்ப சுற்றுலா சென்று நாட்களை கழித்துள்ளனர். பின்னர், தொழில் ஒன்றை தொடங்குவதற்காக ஜெரோனிடம் பணம் கேட்ட ஷாலினி, அதில் வரும் லாபத்தை சரிசமமாக பிரித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். அவரின் பேச்சைக் கேட்ட ஜெரோன் தன்னிடம் இருந்த 1.3 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளார். பணம் சென்ற நாளில் இருந்து திடீரென ஷாலினி ஜெரோனின் தொடர்பை முழுமையாக துண்டித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த ஜெரோன் மும்பை அந்தேரி காவல்நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ஷாலினி சிங் என்ற பெண் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி காதலித்ததாக தெரிவித்துள்ளார். இருவரும் வெளியில் சென்று சுற்றியதாக கூறியுள்ள ஜெரோன், தொழில் செய்வதாக பணத்தை வாங்கிக்கொண்டு ஷாலினி தலைமறைவாகிவிட்டதாகவும் கூறியுள்ளார். தன்னுடன் இறுதி நாட்களில் செலவிடுவதாக கூறிவிட்டு, தற்போது அவருடைய சொந்த கிராமத்தில் சென்று வேறொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் ஜெரோன் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளார். திருமண ஆசைவார்த்தை கூறி தன்னை ஏமாற்றிய ஷாலினி சிங் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஏமாற்றிச் சென்ற ரூ.1.3 கோடி பணத்தை பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Also read... காதலுக்கு புனேவின் கமிஷ்னரை தூது விட்ட இளைஞர்... எப்படி என்று யோசிக்கிறீர்களா?

டெல்லியில் இதுபோன்று அண்டை வீட்டு வயது மூத்த பெண்ணிடம், இளம் பெண் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். பண பரிவர்த்தனை தொடர்பாக செயலிகளை ஆப்ரேட் செய்ய தெரியாத அந்த பெண்மணி, அருகில் வசித்து வந்த பெண் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட அந்த பெண், மார்ச் 2019 -லிருந்து மார்ச் 2020 வரை ரூ.2,38,000 பணத்தை களவாடியுள்ளார். இதனையறிந்த வயது மூத்த பெண்ணின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்ட பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: