கோவிட்-19 நோயாளிகளுக்காக ஆட்டோ ஓட்டும் ஆசிரியர் - இலவச சேவை வழங்கி அசத்தல்!

கோவிட்-19 நோயாளிகளுக்காக ஆட்டோ ஓட்டும் ஆசிரியர் - இலவச சேவை வழங்கி அசத்தல்!

ஆட்டோ ஓட்டும் ஆசிரியர்

மருத்துவமனை, கோவிட் மையங்கள் மற்றும் வீடுகளுக்கு நோயாளிகளை இலவசமாக அழைத்துச் செல்ல ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவை இயக்கி வருகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்று நோயின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பேரிடரை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒரு சில மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். கோவிட்-19 தொற்று கோரத்தாண்டவமாடி வரும் நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் ஒரு பள்ளி ஆசிரியர் கோவிட் நோயாளிகளுக்கு உதவ முன்வந்துள்ளார். நாளுக்கு நாள் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் மும்பையில் ஒரு தொழில்முறை ஆசிரியரான தத்தாத்ரய சாவந்த் (Dattatraya Sawant) என்பவர், மருத்துவமனை, கோவிட் மையங்கள் மற்றும் வீடுகளுக்கு நோயாளிகளை இலவசமாக அழைத்துச் செல்ல ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவை இயக்கி வருகிறார்.

புறநகர் பகுதியான கட்கோபரில் வசிக்கும் சாவந்த், தன்யாசகர் வித்யா மந்திர் என்ற பள்ளியில் பகுதிநேர ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஆசிரியராக இருந்தாலும் நோயாளிகளுக்கு உதவும் இந்த உன்னத சேவையில் அவர் ஈடுபட்டு வருகிறார். பிபிஇ கிட் (PPE kit) எனப்படும் பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு இந்த சேவையை நோயாளிகளுக்காக தத்தாத்ரய சாவந்த் செய்து வருகிறார்.

நோயாளிகளை அழைத்து செல்வதால் தனது ஆட்டோவை சுத்திகரிப்பது போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவறாமல் கடைப்பிடித்து வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ்.லக்ஷ்மன், இது தொடர்பாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்ட ஒரு ஸ்டிலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் சாவந்த் தனது ஆட்டோரிக்க்ஷாவைத் தவிர மஞ்சள் பிபிஇ கிட்டில் நிற்பதைக் காணலாம்.இந்த சேவை தொடர்பாக பேட்டி அளித்துள்ள ஆசிரியர் தத்தாத்ரய சாவந்த், "தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இவர்களில் பலர் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காத காரணத்தால் இறந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், ஏழை நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் அரசாங்க உதவி கிடைக்குமா என்பது சந்தேகமே. அதே போல தனியார் ஆம்புலன்ஸ் சேவைகள் மலிவான விலையில் இல்லை. பொது வாகனங்கள் (public vehicles) பெரும்பாலும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சேவைகளை வழங்குவதில்லை.

Also read... மக்களிடையே தடுப்பூசி போட்டு கொள்வதை ஊக்குவிக்க சாக்லேட் நிறுவனத்தின் வித்தியாசமான முயற்சி!

இந்த நேரத்தில் நான் செய்து வரும் இந்த இலவச சேவையானது நோயாளிகளுக்கு மிகுந்த பயனளிக்கும். நோயாளிகளை பத்திரமாக கொண்டு செல்லவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தனிப்பட்ட முறையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் எடுத்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசிய சாவந்த், நான் கோவிட் நோயாளிகளை பராமரிப்பு மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இலவசமாக அழைத்து செல்கிறேன்.மேலும் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நோயாளிகளை அவர்களது வீடுகளுக்கு அழைத்து சென்று விடுகிறேன் என்றார்.

சாவந்த் இதுவரை 25-க்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகளுக்கு இலவச பயணத்தை வழங்கியுள்ளார். ஆசிரியராக இருந்து கொண்டு சாவந்த் செய்யும் இந்த மனிதாபிமான சேவை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கோவிட்-19 அலை நீடிக்கும் வரை தனது இந்த சேவை தொடரும் என்று தத்தாத்ரய சாவந்த் கூறி உள்ளார். தவிர மும்பை கிரிக்கெட் சங்கம் சாவந்திற்கு தனது முயற்சியில் உதவ முன்வந்துள்ளது. கார்ப்பரேட் விவகார அமைச்சகம் சாவந்தின் ஆட்டோரிக்க்ஷாவிற்கான எரிபொருளின் முழு செலவையும் ஈடுசெய்வதாக அறிவித்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: