Home /News /trend /

உலகின் மர நகரம் 2021: இந்த முறை ஐ.நா. அங்கீகரித்த இந்திய நகரம் எது தெரியுமா?

உலகின் மர நகரம் 2021: இந்த முறை ஐ.நா. அங்கீகரித்த இந்திய நகரம் எது தெரியுமா?

மர நகரம்

மர நகரம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (UN) மற்றும் ஆர்பர் டே அறக்கட்டளை இணைந்து மும்பையை ‘உலகின் மர நகரம் 2021’ என அறிவித்துள்ளது.

    ஆர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் ‘உலகின் மர நகரம்’ என்ற அங்கீகாரத்தை உலகில் உள்ள நகரங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மும்பையை “உலகின் மர நகரம் 2021” ஆக அறிவித்துள்ளது. இந்த பட்டத்தை வெல்லும் இந்தியாவின் இரண்டாவது நகரம் மும்பை ஆகும். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஐதராபாத் ‘உலகின் மர நகரம்’ என்ற பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.

    இந்த அங்கீகாரத்தின் மூலம், ஆரோக்கியமான, நெகிழக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான நகரங்களை உருவாக்குவதில் மரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இணந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) தோட்டத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற காடுகளுக்கு மத்தியில் பசுமையை நிலைநிறுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 138 நகரங்களின் குழுவில் வட இந்தியாவின் தூக்க நகரமான மும்பையும் இணைக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    மாநிலத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரே பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) செய்த பணிகளைப் பாராட்டி, நகராட்சி ஆணையர் டாக்டர் இக்பால் சிங் சாஹலிடம் பாராட்டுக் கடிதத்தை வழங்கியுள்ளார். மும்பை இப்போது நகர்ப்புற மற்றும் சமூக காடுகளில் முன்னணி உலகளாவிய நெட்வொர்க்குகளில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

    உலகின் மர நகரங்கள் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் தகவல்களின் படி, மும்பையில் மொத்தம் 4.25 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன மற்றும் ஒரு மணி நேரத்தில் 25,000 தன்னார்வலர்களை உருவாக்குவதால் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    ஐக்கிய நாடுகளின் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (UN) மற்றும் ஆர்பர் டே அறக்கட்டளை ஆகியவற்றால் ஒரு மர நகரமாக அங்கீகரிக்கப்பட சில தரநிலைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். அதாவது காடுகள் மற்றும் மரங்களை நிர்வகிப்பதற்கான உத்தியோகபூர்வ கொள்கையை வைப்பது, மர மேலாண்மை திட்டத்திற்காக வருடாந்திர பட்ஜெட்டை அர்ப்பணிப்பது மற்றும் மரங்களை வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வருடாந்திர கொண்டாட்டங்களை நடத்துவது போன்றவை இதில் அடங்கும்.

    Also Read : பேனாவின் மூடிகளில் துளை இருப்பது ஏன்? உயிரை காப்பாற்றும் ஆச்சரிய காரணம்

    ஆர்பர் டே அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி, டான் லாம்பே எழுதியுள்ள கடிதத்தில் "2021ம் ஆண்டு மரங்களின் நகரங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட மும்பையை நாங்கள் வாழ்த்துகிறோம். இந்நகரம் இப்போது உலக அளவில் முக்கியமான நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இணைந்துள்ளது. இது மும்பை நகரம் நகர்ப்புற மற்றும் சமூக காடுகளில் முன்னணியில் உள்ளதை காட்டுகிறது” எனக்குறிப்பிட்டுள்ளார்.

    தோட்டங்கள் துறையின் கண்காணிப்பாளர் ஜீதேந்திர பர்தேஷி கூறுகையில் "ஐக்கிய நாடுகள் சபையின் 'உலகின் மர நகரம்' திட்டம் அதன் நகர்ப்புற வனப்பகுதிக்கு சமூகங்களின் அர்ப்பணிப்புக்கான வழிகாட்டுதல், உதவி மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தை வழங்குகிறது. ஆரோக்கியமான, நிலையான நகர்ப்புற வனப்பகுதிக்கு மரம் வளர்ப்பு, மியாவாக்கி காடுகள் மற்றும் பல்வேறு புதுமையான மர பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கோள்காட்டி, ஜனவரி மாதம் நிறுவனம் அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி